பக்கம்:நாவுக்கரசர்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 165

தங்கியிருந்து விழிமிழலைப் பெருமானைக் காலந்தோறும் போற்றி வருகின்றனர்.

படிக்காசு பெறுதல் : அக்காலத்தில் மழையின்மையா லும் வற்றாத காவிரியிலும் நீர் வற்றிப் போனமையாலும் பஞ்சம் ஏற்பட்டு விடுகின்றது. மக்கள் பசியால் வாடுகின் றனர். இந்நிலையில் திருவிழிமிழலைப் பெருமான் ஞானப் பிள்ளையாருக்கும் நாவுக்கரசருக்கும் கனவில் தோன்றி, ‘நீங்கள் கால வேறுபாட்டினால் வருத்தம் அடைய மாட் டீர்கள். எனினும், உங்களைச் சார்ந்து வழிபடும் இயல் புடைய தொண்டர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு நாம் உங்களுக்குப் படிக்காசு தருகின்றோம்’ என்று கூறி விண் விழி விமானத்தின் மேற்குப் பீடத்திலும் கிழக்குப் பீடத் திலும் அவ்விருவர்கட்கும் நாடோறும் படிக்காசு வைத் தருள்கின்றார். அப்பெருமக்கள் இருவரும் வீழிமிழலைப் பெருமான் அளித்த படிக்காசினைக் கொண்டு உணவுப் பொருள்கள் வாங்கித் திருவமுது சமைப்பித்துச் சிவனடி யார்களெல்லாம் எய்தி உண்க’ என இருபொழுதும் (காலை - மாலை) பறைசாற்றி அடியார்களை அமுது செய்வித்துப் பசித்துன்பத்தைப் போக்கியருள்கின்றனர்.11

திருநாவுக்கரசர் சிவபெருமானுக்குக் கைத்தொண்டு புரியும் அடியவராதலால் அவர் பெறும் காசு வட்டமின்றி வணிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பெறுகின்றது. அதனால் அவருடைய திருமடத்தில் நாள்தோறும் உரிய காலத்தில் அடியார்கள் திருவமுது செய்கின்றனர். திருஞான சம்பந்தர் உமையம்மையின் முலைப்பால் உண்டு திருமக னார் ஆதலினால் அவர் பெறும் காசு வணிகர்கள்பால் வட்டம் கொடுத்து மாற்றும் நிலை ஏற்படுகின்றது. இதனால் உணவுப் பொருள்கள் வாங்கக் காலதாமதம் ஏற்படுகின்றது; காலந்தாழ்த்து அடியார்கள் அமுது செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இதனையுணர்ந்த

11. பெ. பு. திருநாவுக், 257.258,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/208&oldid=634206" இலிருந்து மீள்விக்கப்பட்டது