பக்கம்:நாவுக்கரசர்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நாவுக்கரசர்

இதற்கடுத்த சமானேறுகரமுடைய (6.53) என்ற செந் தமிழ் மாலையும் இத்தலத்து எம்பெருமானைப் பற்றியதே. யாகும். இதில், -

பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்,

பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்; மஞ்சடுத்த மணிலே கண்டர் போலும்; .

வடகயிலை மலையுடைய மணாளர் போலும்; செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டனிந்தார் போலும்,

திருவீழி மிழிலையமர் சிவனார் போலும்; அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்;

அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. (7) என்பது ஏழாவது திருத்தாண்டகம். இங்ஙனம் அப்பர் பெருமான் திருவீழிமிழலையானை திருநேரிசை, திருவிருத் தம், திருக்குறுந் தொகை, திருத்தாண்டகம் ஆகிய திருப் பாடல் வகைகளால் போற்றிப் பரவுகின்றார்.

மிழலை மாமணியிடம் பிரியா விடைபெற்றுக்கொள்ளும் பிள்ளையாரும் அரசரும் திருக்கொண்டிச்சரம்” என்னும் திருத்தலத்திற்கு வருகின்றனர், இத்தலத்து ஈசனை அப்பர் பெருமான் இரண்டு செந்தமிழ் மாலைகளால் வழிபடுகின் றார். வரைகிலேன்’ (4.67) என்ற திருநேரிசை மாலையில்,

பாலனாய்க் கழிந்த நாளும்

பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும்

மெலிவொடு முப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும்

குறிக்கோளிலாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித் . . .

திருக்கொண்டிச் சர்த்து ளானே. (9)

12. கொண்டிச்சரம் : நன்னிலத்திலிருந்து 1; கல் தொலைவிலுள்ளது. பார்வதி தேவியார் பூசித்த தலங் களுள ஒனறு. ... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/211&oldid=634210" இலிருந்து மீள்விக்கப்பட்டது