பக்கம்:நாவுக்கரசர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 171

திருக்கோயிலை வலம் வந்து பண்டை நாளில் வேதங்கள் இறைவனை வழிபட்டு அடைத்த திருக்கதவு அமைந்த திருவாயிலுக்கு வருகின்றனர். முன்னாளில் மறைகளால் அடைக்கப்பெற்ற திருக்கதவு மறைகளில் வல்ல அன்ப ரொருவரும் வாராமையால் நெடுநாள் திறக்கப்பெறா திருந்தது. அதனால் அவ்வூர்ப் பெருமக்கள் வேறொரு வாயில் அமைத்து வேதவனப் பெருமானை வழிபட்டு வருவாராயினர். இச்செய்தியை அறிந்த காழிப் பிள்ளை யார் நாவுக்கரசரை நோக்கி அப்பரே, நாம் எப்படியும் நேர்முகமாகவுள்ள இத்திருவாயிலின் வழியே சென்று மறைக் காட்டிறைவரை வழிபட வேண்டும். ஆதலால் இத் திருக்கதவு திறக்கும்படி பதிகம் பாடுவீராக’ என்று வேண்ட, அன்புப் பிள்ளையாரின் விருப்பத்திற்கிசைந்து வாகீசப் பெருமானும் “பண்ணினேர் மொழியாளுமை’ (5.1.0) என்ற திருக்குறுந்தொகைத் திருப்ப்திகத்தைப் பாடிப் பரவுகின்றார்.

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ பண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. (1) என்ற முதற்பாடலைப் பாடினவுடன் செந்தமிழ்ப் பாடல் களின் சுவை நலன்களைத் துய்க்க விரும்பிய மறைக்காட் டிசர், திருக்கதவின் திருக்காப்பு நீக்கக் காலந் தாழ்த்துகின்

அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் செய்த அற்புதத் தலம். தமிழ் மொழியிலுள்ள தேவாரம் வடமொழி வேதத் திற்குத் தாழ்ந்ததல்ல என்பதைக் கட்புலனாக உலகுக்கு அறிவித்தது இவ்வற்புதம். பாண்டி நாட்டிற்கெழுந்தருளும் படி சம்பந்தருக்கு அழைப்பு வந்தது. அவர் இத்தலத்தி லிருந்தபோது கோயிலில் உள்ள விளக்கு ஒன்றைத் தனது மூக்கினால் துரண்டிய எலி, அப் புண்ணியத்தின் பயனாக மறு பிறவியில் மாவலிச் சக்கரவர்த்தியான வரலாற்றைப் பாசுரம் (4.49:8) கூறும். மேலைக்கோபுர வாயிலின் எதிரி லுள்ள விநாயகர் சந்நிதி புகழ் வாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/214&oldid=634213" இலிருந்து மீள்விக்கப்பட்டது