பக்கம்:நாவுக்கரசர்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 173

இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டு அடியார் கூட்டம் அடைந்த நிலையைச் சேக்கிழார் பெருமான்,

அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்

டடியார் எல்லாம் அதிசயித்துப்

பொங்கு புளகம் எய்திடமெய்

. பொழியும் கண்ணிர் பரந்திழிய

எங்கும் கிகரொன் றில்லாத

இருவர் பாதம் இறைஞ்சினார்

நங்கள் புகலிப் பெருந்தகையும் -

அரசும் மடத்தில் கண்ணியின், 17

என்று போற்றி மகிழ்வர். இவ்வாறு வேதங்களால் வழி படப்பெற்று அடைக்கப்பெற்ற திருக்கதவு அவ்வேதங்களில் வல்ல எவரும் வாராமையினால் நெடுங்காலம் திறக்கப் பெறாதிருந்து பின்பு நாவுக்கரசரின் திருவாய் மொழியால் திறக்கப்பெற்றதாகிய இந்த அற்புத நிகழ்ச்சி, பண்டை நான்மறைகட்கும் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திரு முறைகட்கும் சிறிதும் வேற்றுமை இல்லை என்பதனைத் தெளிவாக வலியுறுத்தலைக் காண்கின்றோம். திருநாவுக் கரசரின் செந்தமிழ் மறைகளாகிய திருமுறைகளின் பெருமையினை, -

மணியினை மாமறைக் காட்டு

மருந்தினை வன்மொழியால் திணியன நீள்கதவம் திறப்பித்

தனதெண் கடலிற் பிணியன கண்மிதப் பித்தன சைவப்பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் -

பிரான்றன் அருந்தமிழே.1

17. o பெ. பு, திருநாவுக், 274. 18. திருத்தொண்டர் திருவந்தாதி.25,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/216&oldid=634215" இலிருந்து மீள்விக்கப்பட்டது