பக்கம்:நாவுக்கரசர்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 175

மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார தென்கொலோ. (5.50:2)

என்ற குறுந்தொகைப் பதிகம் பாடிக்கொண்டு, ஈது எம் பெருமான் அருளாகில் யானும் ஏகுவேன்’ ‘ என எழுந்து செல்லத் தொடங்குகின்றார். இறைவனும் அப்பரடிகட்குக் கனவில் தோன்றிய திருக்கோலத்துடன் விரைந்து நடந் தருள்கின்றார். இங்ஙனம் நெடும் பொழுது விரைந்து நடந் தும் தமக்குமுன் செல்லும் வாய்மூர் அடிகளை அணுக முடியவில்லை. இந்நிலையில் இறைவன் அணிமையில் காட்சி நல்குபவர் போலப் பொன் மயமான திருக்கோயிலை எதிரே காட்டி அதனுள்ளே புகுந்து மறைந்தருள்கின்றார்: நாவுக்கரசருக்கு இம் மறைவு மனக்கலக்கத்தை உண் டாக்குகின்றது.

இந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் அடியார்கள் மூலம் நாவுக்கரசர் திருவாய்மூருக்குச் செல்வதைக் கேள்வி யுற்று அவரைப் பின் தொடர்கின்றார்; தம்பால் வைத்த பேரன்பினால் தம்மைத் தேடிவருகின்ற சம்பந்தப் பிள்ளை யாரைச் சேய்மையில் காண்கின்றார் நாவுக்கரசர். பிள்ளை யார் தம்மை அணுகிய நிலையில், ‘இறைவனின் திருக் குறிப்பறியாது திருக்கதவம் திறக்கப்பாடிய என்னைக் காட்டிலும், செந்தமிழ்ப் பதிகத்தால் அடைப்பித்த ஞான சம்பந்தப் பிள்ளை யார் இதோ வந்து நிற்கின்றார். எளி யேற்கே அல்லாது இப்பெருமானுக்கும் தம்மை மறைக்கும் வன்மையுடையரோ வாய்மூரடிகள்?’ என வினவும் குறிப் -6%,

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தா ருங்கின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. (5.50:8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/218&oldid=634217" இலிருந்து மீள்விக்கப்பட்டது