பக்கம்:நாவுக்கரசர்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு is 7

மேலும் இதே பதிகத்தில் (5.50) அப்பர் பெருமான்,

எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு அங்கே வந்துஅடையாளம் அருளினார் (1)

தஞ்சே கண்டேன், தரிக்கிலாது ஆரென்றேன்! (3) கழியக் கண்டிலேன் கண்ணெதிரே கண்டேன் (4)

என்றெல்லாம் பாடியவை இக் கருத்தினை (அதாவது) இறைவன் அப்பருக்கு நேரே காட்சி நல்கியதை) வலியுறுத்து கின்றன. மேலும் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்ச்சியி னைத் திருஞான சம்பந்தர் புராணத்தில்

அங்கிலை அணைந்த போதில்

அம்பிகை உடனே கூட மன்னிய ஆடல் காட்டத்

தளரிள வளரும் பாடிச் சென்னியால் வணங்கி வாய்மூர்

அரசொடும் சென்று புக்கங்கு இன்னியில் புறமுன் கூடி

இருவரும் போற்றி செய்தார்.”

என்றே பாடுதலில் ஆடல் காட்ட’ என்று திருக்கோலம் காட்டிய செயலை இறைவன் செயலாகவே கொண் டிருப்பது மேலும் இக்கருத்திற்கு அரணாக அமைகின்றது.

வாய்மூர் அடிகள் தமக்கும் நேரே காட்டிய ஆடலைக் கண்டு மகிழும் அப்பர் பெருமான் பாட அடியார்” (6.77) என்ற திருத்தாண்டகப் பதிகத்தில் தம் மகிழ்ச்சியைப் புலப் படுத்துகின்றார்.

22. பெ. பு: ஞான சம்பந்தர்.696

நா-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/220&oldid=634220" இலிருந்து மீள்விக்கப்பட்டது