பக்கம்:நாவுக்கரசர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX

ஒத்த அருட்பனுவல்களுக்கும் உண்டு. அந்த இயல்பினை நன்குணர்ந்த இராமலிங்க வள்ளலார் திருவாசக மாட்சி கூறுங்கால்,

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் கற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து ஊன்கலந்து என் உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

-திருவருட்பா - 3268 (ஐந்தாம் திருமுறை)

என இயம்பியுள்ளார். திருவாசகப் பாடவின் மாட்சி கூறிய இப்பாடலில், பொதுவாக இலக்கியப் பாடல்களைப். குறிப்பாகப் பக்திப் பாடல்களைப் பயின்று இன்பங் காண முற்படுவோர் தவறாது மேற்கொள்ள வேண்டிய கருத்து ஒன்றினைக் குறிப்பிட்டுள்ளார். அது நான்கலந்து பாடு தல் என்பதாகும். பக்திப் பனுவல்களின் பயன் கொள் வதற்கு படித்தலோ பாடுதலோ மட்டும் போதா, படிக்கும் போதும் பாடும்போதும் நான் கலக்கப் பெறுதல் வேண்டும்!

“நான் கலத்தல் என்னும், பக்தி இலக்கிய அநுபவ உத்தியினை இக்கால இலக்கியத் திறனாய்வாளர் வேறு வகையாக விளக்குவர். கவிதை அநுபவம், பாடியோர், பாடுபொருள், பயில்வோர் என்னும் மூன்று கூறுபட்ட தாகும். பாடுபொருள்பற்றிய உணர்ச்சியும், பாடியோர் உணர்ச்சியும் ஒன்றுபட அமைவதே கவிதை. அந்த இரு உணர்ச்சிகளும் ஒன்றுபட்டு விளங்கும் கவிதையில் பயில் வோரின் உணர்ச்சி ஒன்றுபடப் பயின்றால் அங்குக் கவிதை இன்பம் அதுபவமாகும். கவிதை இன்பத்திற்கு அடிப் படையாகிய முக்கூற்று உணர்ச்சிகளுள் கவிதையில் இரு உணர்ச்சிகள் நேர்பட்டு நிற்கின்றன. அவற்றோடு கற் போன் உணர்ச்சியும் இயைந்து நேர்படுதல் வேண்டும். மூன்று உணர்வுகளும் நேர்படுவதனையே “நான் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/23&oldid=634230" இலிருந்து மீள்விக்கப்பட்டது