பக்கம்:நாவுக்கரசர்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நாவுக்கரசர்

திருவிழிமிழலைக்கு ஏகுவதற்கு முன்னர் நாகைக் காரோணத்திற்கு வருகின்றார். இத்தலத்து எம்பெருமானை நான்கு பதிகங்களால் ஏத்துகின்றார். மனைவி தாய் தந்தை’ (4. 71) என்று தொடங்கும் திருநேரிசைப் பதிகத்தில்,

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வினையுளே விழுந்த ழுந்தி

வேதனைக் கிடமா காதே கனையுமா கடல்சூழ் நாகை

மன்னுகா ரோணத் தானை நினையுமா வல்லி ராகில்

உய்யலாம் நெஞ்சி னிரே, (1)

என்பது முதல் திருநேரிசைப் பாடலாகும். வடிவுடை மாமலை’ (4. 103) என்ற திருவிருத்தப் பதிகத்தில்,

வங்க மலிகடல் நாகைக்கா

ரோணத்தெம் வானவனே எங்கள் பெருமானொர் விண்ணப்பம்

உண்டதுகேட் டருவீர் கங்கை சடையுட் கரந்தாய்அக்

கள்ளத்தை மெள்ளவுமை நங்கை அறியிற்பொல் லாதுகண்

டாய்னங்கள் நாயகனே(8)

3. நாகைக்காரோணம் (நாகப்பட்டணம்): இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. ஓர் இருடியைக் காயத்தோடு வானுலகிற்கு ஆரோஹணம் செய்யும்படி இறைவன் அருளியதால் காயாரோஹணம் என்பது மருவிக் காரோணம் எனத் தலப்பெயருடன் சேர்ந்தது. அதிபத்த நாயனார் அவதரித்துப் பொன்மீனைச் சிவார்ப்பணம் செய்து முத்தி பெற்ற தலம். தம்பிரான் தோழர் பொன் பெற்ற தலங்களுள் ஒன்று. சப்தவிடகங்களுள் இங்கு சுந்தர விடங்கர், பாராவாரதரங்க நடனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/233&oldid=634234" இலிருந்து மீள்விக்கப்பட்டது