பக்கம்:நாவுக்கரசர்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 . நாவுக்கரசர்

வடதளி ஈசன் பழையாறை நகரத்தின் வேந்தனின் கனவில் தோன்றி நாம் சமணர்களால் வடதளியில் மறைக் கப் பட்டுள்ளோம் என்று அடையாளங்களுடன் சொல்லி, நம்மை நாவுக்கரசன் வெளிப்படக் கண்டு வழிபடும்படி யாக நீ முறையற்ற அமணர்களை அழித்துப் போக்குவா யாக’ என்று அருளி மறைந்தருள்கின்றார். விழிப்புற் றெழுந்த வேந்தன் தான் கண்ட கனவினை அமைச்சர் கட்குத் தெரிவிக்கின்றான். இறைவன் அருளிச் செய்த அடையாளங்களின்படி அமைச்சர்களுடன் வடதளியை அடைந்து அமணர்கள் புரிந்துள்ள வஞ்சனையைக் கண்டறி கின்றான். திருத் தொண்டராகிய நாவுக்கரசரின் அடிபணி கின்றான். வடதளியை வஞ்சனையால் மறைத்த சமணர் களின்மீது யானைகளை ஏவி தொக்க அமணர் தூர் அறுக் கின்றான். அவர்கள் கட்டிய பொய்யான விமானத்தை நீக்கிச் சிவபெருமானுக்குப் புதியதொரு விமானத்தை அமைக்கின்றான்; நாள் வழிபாட்டுக்கு வேண்டும் நிபந்தங் களையும் வழங்கி வடதளியீசனை வணங்கி மகிழ்கின் நான்18. . w.

இவ்வாறு இறையருளால் தாம் எண்ணியது நிறை வேறியமைகண்டு மகிழ்ந்த நாவுக்கரசர் தலையெலாம் பிறிக்கும்'(5.58) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தால் வடதளியீசனை வழிபடுகின்றார். இதன் முதற் பாடல்,

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தால்மறைக் கொண்னுமே அலையி னார்பொழில் ஆறை வடதளி நிலையி னானடி யேகினைந் துய்ம்மினே. (1) என்பது தலை பறித்து நின்றுண்ணும் இயல்பினராகிய சமணர்கள் தம் வ ஞ் ச ைன யால் எம்பெருமானை மறைக்க முயன்றனராயினும் நிலையற்ற அவர்களால்

13. டிெ 297-299,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/239&oldid=634240" இலிருந்து மீள்விக்கப்பட்டது