பக்கம்:நாவுக்கரசர்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 197

நிலையுடைய மெய்ப்பொருளாகிய இறைவனை மறைத்தல் கூடுமோ?’ என்ற கருத்து இதில் அடங்கியுள்ளதைக் கண்டு மகிழலாம். -

வரலாற்று நிகழ்ச்சிகள் அடங்கிய இக்குறுந்தொகைப் பதிகப் பாடல்களைச் சிறிது நுணுகி ஆராய்வோம். சமணர்கள் அமைத்த விமானத்தருகே நாவுக்கரசர் சென்ற பொழுது திருக்கோயிலைத் தொழுவதில் பயிற்சி மிக்க அவரது கைகள் தாமே தொழுதன என்பதை,

அண்ட ரைப்பழை யாறை வடதளிக்

கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே. (3) என்ற அவரது திருவாக்கால் இனிது விளங்கும். வண்ணங் கண்டு நான் உம்மை வணங்கியன்றிப் போகேன் 14 என்று இறைவனைச் சிந்தித்து உண்ணா நோன்பு மேற்கொண் டிருந்த நாவேந்தர், தம் பொருட்டு இறைவன் பழையாறை வேந்தனது கனவில் தோன்றி வடதளி மறைக்கப் பட்டிருப்பதனை அடையாளங்களுடன் கூறித் தெளிவித்த செய்தியை,

அருட்டி றத்தணி யாறை வடதளித்

தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. (1) என்ற தொடரால் கு றி ப் பி ட் ட ைம தெளியலாம். அமணர்களின் வஞ்சனையைக் கண்டுணர்ந்த காவலன் முறையற்ற செயலில் ஈடுபட்ட சமணர் ஆயிரவரையும் யானைகளால் அழித்தமை,

மூக்கி னான்முரன் றோதிய குண்டிகை

தூக்கி னார்க்குலங் தூரறுத் தேதனக் காக்கி னான்.அணி யாறை வடதளி. (2)

எனவும்,

14. டிெ. 29.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/240&oldid=634242" இலிருந்து மீள்விக்கப்பட்டது