பக்கம்:நாவுக்கரசர்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நாவுக்கரசர்

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி

மறைக்காட்டேன் என்றோர் மழலை பேசிச் செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று

நெடுங்கண் பனிசோர கின்று நோக்கிப் பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்

புறம்பயம்ரும் ஊரென்று போயி னாரே. (7) ஏழாவது தமிழ் மணம் வீசும் செந்தமிழ்ப் பாமலர்.

இஃது அப்பர் பெருமானின் அருமையான அகத்துறைப் பதிகம். தலைவி தோழியிடம் கூறும் பாவனையில் அமைந் தது. கனவு நிலை கலந்த அப்பரின் அநுபவங்கள் இதில் அழகுற வடிக்கப்பெற்றுள்ளன. காதல் பக்தியாக மலர்ந் துள்ளதைக் காட்டும் அரிய பதிகம். இறைவன் வெளிநின் றருளும் பாங்கு இப்பதிகத்தில் தத்துவப் பொருள் துலங்கச் சித்திரிக்கப்பெற்றுளது. ஒவ்வொரு பாடலும் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே’ என்று முடிவதுபோல் திருமங்கையாரின் திருநெடுந்தாண்டகத்திலும் புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே’ (திருநெடுந் 24, 25) என்று முடிகின்றன. தாண்டக வேந்தர் அப்பர் பெருமா னின் அச்சு மங்கை மன்னனின் பாடல்களில் தெரிகின்றது.

புறம்பயத்துப் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு ‘விசய மங்கை20 என்ற திருத்தலத்துக்கு எழுந்தருளுகின்

வெற்றிபெற்றுத் தென்னவனாய் உலகாண்டான் (சுந்தரர் 7-39:11). திருமருகல் வரலாற்றைப்போல் இங்கும் ஒரு வணிகப் பெண்ணின் திருமணத்தை மெய்ப்பிக்க இறைவன் சாட்சி சொல்லியதால் தலத்து இறைவன் சாட்சி நாதே சுவர் என்ற பெயருடன் திகழ்கின்றார்.

20. விசயமங்கை : சுந்தரப் பெருமான் கோயில் இருப்பூர்தி நிலையத்திலிருந்து (கும்பகோணத்திற்கு மேற்கி லுள்ளது) 4 கல் தொலைவு. விசயன் (= அருச்சுனன்) வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/245&oldid=634247" இலிருந்து மீள்விக்கப்பட்டது