பக்கம்:நாவுக்கரசர்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210. ந்ாவுக்கர்சர்

தொண்டு பாடியும் தூமலர் தூவியும் இண்டை கட்டி இணையடி யேத்தியும் பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. (10)

என்பது பத்தாம் நறுமலர். இம்மாலை பதினொரு மலர் களாலான தமிழ் மாலை.

பராய்த்துறை ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு திருக்கடம்பந்துறை’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். “முற்றிலாமுலை (5.18) என்ற முதற் குறிப்புடைய திருக் குறுந்தொகைப் பதிகத்தால் வழிபடுகின்றார். இதில்,

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண கன்மல ரான்பல தேவரும் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை கண்ண நம்வினை யாயின நாசமே. (4) என்பது நான்காம் பாடல். *

கடம்பந்துறைப் பெருமானிடம் வி ைட பெற்றுக் கொண்டு வாட்போக்கி’ என்ற திருத்தலத்திற்கு வருகின் றார். வந்தவர் ‘காலபாசம்’ (5.86) என்ற முதற்குறிப்பை யுடைய திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலையால் வழி படுகின்றார். இதில், -

30. கடம்பந்துறை (கடம்பர் கோயில்): திருச்சி.ஈரோடு இருப்பூர்தி வழியில் குழித்தலை என்ற நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. காலையில் இத்தலம், கட்டுச்சியில் வாட் போக்கி, மாலையில் ஈய்ங்கோய்மலை ஆகிய மூன்றையும் கார்த்திகை சோம வாரங்களில் இந்நாட்டு மக்கள் சேவிக்கும் வழக்கமுடையவர்கள். அகண்ட காவிரியின் தென்கரைத் தலம். -

31, வாட்போக்கி (இரத்தினகிரி), குழித்தலையிலிருந்து 5 கல் தொலைவு. உயர்ந்த மலை; கடல் மட்டத்திற்கு மேல் 1178 அடி உயரமுள்ளது (952 படிகள்). காலையில் கடம்பந்துறை, கட்டுச்சியில் இத்தலம், மாலையில் திருஈய்ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/253&oldid=634256" இலிருந்து மீள்விக்கப்பட்டது