பக்கம்:நாவுக்கரசர்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 21i

கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து தெளிவுற லாகுமே ஆற்ற வும்மருள் செய்யும்வாட் போக்கிபால் ஏற்று மின்:விளக் கையிருள் நீங்கவே. (4)

என்பது தமிழ் மணக்கும் வாடா நறுமலர். மரணம் வரும்

முன் மாதேவனை நினைக்கத் தூண்டும் அற்புதத் திருப் பதிகம். -

வாட்போக்கியாரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு திருப்பாண்டிக் கொடுமுடிக்கு: வருகின்றார். வந்தவர், சிட்டனை’ (5.81) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந் தொகைப் பதிகத்தால் வழிபடுகின்றார். இதில்,

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல் கிழலமர் பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி கட்ட னைத்தொழ நம்வினை நாசமே (1)

என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். இப் பதிகத்தில் ஐந்து

பாடல்களே காணப்படுகின்றன. இதில் மூன்றாவது பாடல் அகத்துறையில் தாய்க்கூற்றாக அமைந்துள்ளது.

கோய் மலை ஆகிய மூன்றையும் கார்த்திகை சோம வாரங் களில் இந்நாட்டு மக்கள் சேவிப்பது வழக்கம். அகண்ட காவிரியின் தென்கரைத் தலம். - 32. பாண்டிக்கெடுமுடி (கொடுமுடி): இருச்சி.ஈரோடு இருப்பூர்தி வழியில் கொடுமுடி நிலையத்திலிருந்து கல் தொலைவு. இது கொங்கு நாட்டைச் சேர்ந்தது. அகண்டி காவிரியின் தென்கரையிலுள்ள தலம். கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழனுள் ஒன்று. கறையூர் என வழங்கப்படு கின்றது. மூவர் தேவாரங்களையும் பெற்ற ஒரே ஒரு கொங்கு நாட்டுத் தலம் இது. அப்பா பெருமானால் பாடப் பெற்ற ஒரே ஒரு கொங்கு நாட்டுத் தலமும் இதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/254&oldid=634257" இலிருந்து மீள்விக்கப்பட்டது