பக்கம்:நாவுக்கரசர்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 215

என்பது ஏழாவது பாடல். எல்லாப்பாடல்களும் (அண்ணா மலையானை) அடியேன் மறந்துய்வனோ என்று முடிந்து படிப்போர் மனத்தை உருக்குகின்றன.

‘பட்டியேறுகங் (5.5) என்ற முதற் குறிப்புடைய திருக் குறுந்தொகையும் அண்ணாமலையாரைப் பற்றியதே.

இதில்,

கண்ட்ங் தான்கறுத் தான்காலன் ஆருயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் அண்டத் தோங்கும்.அண்ணாமலை கைதொழ விண்டு போகும்.நம் மேலை வினைகளே. (8) என்பது எட்டாம் திருப்பாடல்.

அடுத்து புக்கணைந்து (5.95) என்று தொடங்கும் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையும் (பொதுப் பதிகங் களில் உள்ளது. இது) திருமாலும் நான்முகனும் காண முடியாத மாதேவன் வரலாறும் அண்ணாமலையை ஒட்டிய தாகையால் சிவக் கவிமணி அவர்கள் இவ்விடத்தில் இ ைண த் து நோக்குகின்றார்கள். இலிங்கபுராணம்’ அண்ணாமலையை ஒட்டியதாக இருக்கலாம். இப்பதிகம் அண்ணாமலையிலேயே பாடப்பெற்றதா என்பது ஆய்வுக் குரியது.

திருவண்ணாமலையில் பல நாட்கள் தங்கி கைத் தொண்டுகள் புரிந்திருக்கின்றார். பின்னர் தொண்டை நாட்டுத் திருத்தலங்களைச் சேவிக்கக் கருதுகின்றார். தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/258&oldid=634261" இலிருந்து மீள்விக்கப்பட்டது