பக்கம்:நாவுக்கரசர்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 217.

காஞ்சி நகரை? அடைகின்றார். அதிகைப் பெருமானால் சூலை நோய்தந்து ஆட்கொள்ளப்பெற்ற திருநாவுக்கரசர் இங்கு எழுந்தளருப் பெற்றோம்” என்று களிப்புற்ற காஞ்சி நகரப் பெருமக்கள் திருநாவுக்கரசரை எதிர்கொண்டு போற்றுகின்றனர். நகரத்தை நன்கு அலங்கரித்தும் பல சிறப்புப் பொருள்களை ஏந்திக்கொண்டும் அடியார் குழாம் திரண்டு எழுந்து சிறந்த வரவேற்பு நல்குகின்றது. ‘மலை வல்வி தழுவக் குழைந்த பெருமானைக் கண்டவுடன் நாவுக்கரசரின் நிலையைச் சேக்கிழார் பெருமான்,

வார்ந்து சொரியும் கண்ணருவி

மயிர்க்கால் தோறும் வரும்புளகம் ஆர்ந்த மேனிப் புறம்பலைப்பு

அன்பு கரைந்தேன் புள்ளலைப்பச் சேர்ந்த நயனப் பயன்பெற்றுத்

திளைப்பத் திருவே கம்பர்தமை நேர்ந்த மனத்தில் உறவைத்து

நீடும் பதிகம் பாடுவார்.8 என்று காட்டுவார். இவர் பாடிய பதிகம் ‘கரவாடும் வன் னெஞ்சர்க் கரியானை (4.7) என்று தொடங்குவது.

2. கச்சி ஏகம்பம் (ஏகாம்பரேசுவரர் கோயில்): இருப் பூர்தி நிலையிலிருந்து 1 கல் தொலைவு. பேருந்து நிலையத் திலிருந்து பேருந்து மூலம் செல்வதே ஏற்றது. என்றும் அழியாத மாவடியின்கீழ் இறைவன் இருந்ததால் (ஏக+ ஆம்ரன் = ஒரு மாவின் கீழிருப்பவன்) ஏகாம்பரன் ஆயினன். காஞ்சிப் பதியிலுள்ள எல்லாச் சிவாலயங்களும் தேவார வைப்புத்தலங்களே. காஞ்சியிலுள்ள எந்தச் சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி இல்லை. இவ்வாலயங் களிலுள்ள சிவபெருமானுக்கு அம்பிகை காமாட்சி அம்மை யாகத் தனிக்கோயிலில் உள்ளார். இவர் இரு நாழி நெல் கொண்டு 32 அறங்களை வளர்ப்பவர். காஞ்சியிலுள்ள இராஜவீதிகள்போல் அகன்ற மாடவீதிகள் வேறு எத்தத் தலத்திலும் இல்லை. ஏழு திருமுறைகளிலும் கச்சி ஏகம்பத் திற்குத் திருமுறைகள் உண்டு. -

8. பெ.பு. திருநாவுக்கரசு. 323.

  • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/260&oldid=634264" இலிருந்து மீள்விக்கப்பட்டது