பக்கம்:நாவுக்கரசர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நாவுக்கரசர்

இதன்பிறகு கச்சிதிருமேற்றளிக்கு வருகின்றார். வந்தவர் இறைவனைப் பணிந்து மறையது பாடி (4.43) என்ற செந்தமிழ்ப் பதிகம்ப்ாடிப் போற்றுகின்றார்,

செல்வியைப் பாகம் கொண்டார்;

சேந்தனை மகனாக் கொண்டார்: மல்லிகைக் கண்ணி போடு

மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரையி லாத

காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்

இலங்குமேற் றளியனாரே (8) என்பது இத்திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடல்,

இதனை அடுத்து, மாற்பேறு என்ற திருத்தலத்தை அடைகின்றார். -

இத்திருத்தலத்தை நான்கு பதிகங்களால் வழிபடுகின் றார். முதலில் மாணிக்குயிர் (4.108) என்ற திருவிருத்தச்

5. கச்சித் திருமேற்றளி (பிள்ளைப் பாளையம்):காஞ்சி யிலிருந்து 1 க்ல் தொலைவு. இக்கோயிலில் சிவபெருமான் சந்நிதிகள் இரண்டுள்ளன. ஒன்று, திருமாலுருவம் சம்பந்தர் பதிகம் ஓத உருகிச் சிவலிங்கமாகிய ஓத உருகேசர் சந்நிதி; மற்றொன்று திருமேற்றளி நாதர் சந்நிதி. சந்நிதித் தெருவின் கோடியில் சம்பந்தர் கோயில் உள்ளது. இவர் வருகையால் (=ஆளுடைய பிள்ளையார்) இப்பகுதி பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது. சம்பந்தர் பதிகம் கிடைத்திலது. வைணவ தலங்கள் 108 இல் (=திவ்விய தேசங்கள்) 14 காஞ்சியில் உள்ளன. -

6. மாற்பேறு (திருமால்பூர்): செங்கற்பட்டு . காஞ்சி . அரக்கோணம் இருப்பூர்தி வழியில் ‘திருமால்பூர் ஒரு திலையம். நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது இத்திருத்தலம். திருமால் சக்கராயுதம் வேண்டிச் சிவனை வழிபட்டுப் பெற்றதை (5,59:1) என்ற பாசுரம் கூறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/263&oldid=634267" இலிருந்து மீள்விக்கப்பட்டது