பக்கம்:நாவுக்கரசர்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நாவுக்கரசர்

கையானை (6.92) என்ற தாண்டகப் பதிகம் பாடி வழிபடு கின்றார்.

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை

முதுபிணக்கா டுடையானை முதலா னானை ஆவினிலைக் துகந்தானை அமரர் கோனை

ஆலாலம் உண்டுகந்த ஐயன் தன்னைப் பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்

புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. (1)

என்பது முதற்பாடல். இதில் முதலிரண்டு பாடல்களே உள்ளன. . .

திருக்கழுக்குன்றத்தை வழிபட்ட பெருமான் திரு வான்மியூர் வருகின்றார். விண்ட மாமலர்’ (5.82) என்ற பதிகம் பாடிப் போற்றுகின்றார்.

ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம் கழலடி நாட்டி காண்மலர் தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்ந்திடும் வான்மியூர் ஈசனே. (9)

என்பது இப்பதிகத்தின் ஒன்பதாவது திருப்பாடல்.

8. வான்மியூர் (திருவாமூர்): சைதாப்பேட்டையி விருந்து 4 கல் தொல்ைவிலுள்ளது. பேருந்து வழி. பாரி முனையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. வான்மீக முனிவருக்குத் திருநடனச் சேவை தந்த தலம். சப்தவிடங் கக் கணக்கில் சேராத தியாகராஜ ஸ்தலம். கருவறைச் சிவலிங்கத்தைக் காராம்பசு பால்சுரந்து திருமுழுக்காட்ட உருகியதால், மூர்த்தி அந்நிலையில் காட்சி தருகின்றார், கடற்கரைத் தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/267&oldid=634271" இலிருந்து மீள்விக்கப்பட்டது