பக்கம்:நாவுக்கரசர்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 235

திருவான்மியூர் ஈசனை லழிபட்ட திருநாவுக்கரசர் மயிலாப்பூர் வருகின்றார். காபாலீச்சரரை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). மயிலையை வழிபட்ட வாகீசர் திரு வொற்றியூர் வருகின்றார். எழுதாத மறை அளித்த எழுத் தறியும் பெருமானைப் பதிகங்கள் பாடிப் போற்றுகின் றார். :வண்டோங்கும் செங்கமலம்'(6.45) என்ற முதற் குறிப்புடைய திருத்தாண்டகம் பாடிப் போற்றியதாகக் காட்டுவர் சேக்கிழார் பெருமான்.

9. மயிலை (மயிலாப்பூர்): சென்னை எழும்பூரிலிருந்து 4கல் தொலைவு. நகரின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி உண்டு. உமாதேவியார் மயிலுருவில் சிவ பெருமானைப் பூசித்துத் தமது சுயரூபம் பெற்று இறை வனைத் திருமணம் செய்து கொண்ட தவம், கோயிலின் பெயர் காபாலீச்சரம் (காபாலீசுவரர் கோயில்). சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத் தலம். பழைய காலத் தில் திருக்கோயில் கடற்கரையோரத்தில் இருந்தது. அதாவது இப்போது சாந்தோம் மாதாக்கோயிலுள்ள இடத்திலிருந்தது. கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் கைப்பற்றிக் கோயிலைத் தகர்த்து அங்கு ஒரு கோட்டை கட்டினர். பழைய கோயில் கடற்கரையில் (இப்போது திருச்செந்தூர் கோயிலுள்ளதுபோல) மதிற் சுவர்களில் அலைவீச இருந்தது. ஊர்திரை வேலை உலா வும் உயிர் மயிலை (சம்பந்தர் 2.47:4) என்ற பாடற் குறிப்பால் அறியப்படும். ஆண்டில் பல நாட்கள் விழாக் க்ோலம் கொண்டிருக்கும் கோயில், அறுபத்து மூவர் உற். சவம் புகழ் பெற்றது. திருவள்ளுவர் வாழ்ந்த தலம். இவர் கோயில் காபாலீச்சரத்தின் வடதிசையில் கல் தொலைவி லுள்ளது. வாயிலார் நாயனார் மெளன் விரதம் பூண்டு அகப்பூசை செய்து முத்தி பெற்றதலம். இத்தலம் புனனை யங்கர்னல்’ என்றும் வழங்கப்பெறும்.

10. ஒற்றியூர் (திருவொத்தியூர்): இருப்பூர்தி நிலையம், சென்னைக்கூடுர் இருப்பூர்தி வழியில் உள்ளது. நிலையத்தி லிருந்து கல் தொலைவு. தங்கசாலை, பாரிமுனையி லிருந்து அடிக்கடிப் பேருந்துகள் ஒடுகின்றன. புற்றிடங் கொண்டார், வன்மீக நாதர், படம் பக்க நாதர் - இவை

நா.-15 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/268&oldid=634272" இலிருந்து மீள்விக்கப்பட்டது