பக்கம்:நாவுக்கரசர்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நாவுக்கரசர்

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை மலையல்லை கடலல்லை வாயு வல்லை எண்ணல்லை யெழுத்தல்லை எரியு மல்லை

இரவல்லை. பகலல்லை யாவு மல்லை பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை

பிறிதல்லை யானாயும் பெரியோய் நீயே உண்ணல்லை கல்லார்க்குத் தீயை அல்லை

உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே, (9) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாவது தாண்டகம்.

இத்தலத்தில் பலநாள் தங்கிக் கைப்பணி செய்ததுடன் திருப்பதிகங்கள் பாடியும் போற்றியதைச் சேக்கிழார் பெருமான்,

விளங்குபெருங் திருமுன்றில்

மேவுதிருப் பணிசெய்தே உளங்கொள்திரு விருத்தங்கள்

ஓங்குதிருக் குறுந்தொகைகள் களங்கொள்திரு நேரிசைகள்

பலபாடிப் கைதொழுது வளங்கொள்திரு பதியதனில்

பலநாள்கள் வைகினார்.’ என்று காட்டுவார். இங்குக் காட்டிய திருத்தாண்டகப் பதி கத்தைத் தவிர வேறு நான்கு பதிகங்களும் பாடியுள்ளார்.

மூர்த்தியின் பெயர்கள், கார்த்திகை பெளர்ணமி அடுத்த இரண்டு நாட்கள் புற்றின் மேலுள்ள கவசம் எடுத்து விடப் படும்; புற்றாகவே உள்ள மூர்த்தியைக் காணலாம். கவசம் சாத்தியிருக்கும்போது புற்றின் ஒரு சிறு பகுதி மட்டிலும் காணப்படும். சப்தவிடங்கக் கணக்கில் சேராத தியாகராஜர் தலம். சுந்தரர் சங்கிலியாரை மணந்த தலம். பட்டின்த் தடிகள் போற்றிய தலம்; அவருடைய முத்தி தலம். இவர் கோயில் தேர் நிலையிலிருந்து ; கல் தொலைவிலுள்ளது. கலிய நாயனார் தொண்டு புரிந்து முக்தியடைந்த தலம்.)

11. பெ. பு. திருநாவுக்கரசு.337 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/269&oldid=634273" இலிருந்து மீள்விக்கப்பட்டது