பக்கம்:நாவுக்கரசர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv

பாடல்களும் அவ்வாறே சாத்திரமும் தோத்திரமுமாக அமைந்து சிவம் பெருக்கும் ஞானச் செல்வமாகத் திகழ் கின்றன .

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் தொகுத்தும், நம்பி யாண்டார் நம்பியவர்களால் வகுத்தும் கூறப்பெற்ற சிவனடியார் வரலாறுகளைச் சேக்கிழார் விரித்துப் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் திகழும் திருத்தொண்டர் புராணமாக பெரிய புராணமாக இயற்றியுள்ளார். சோழ மன்னரின் முதலமைச்சராகத் திகழ்ந்த சேக்கிழார் தமக்கு முந்திய சிவனடியார்களின் வரலாறுகளுக்கான கல்வெட்டு, இலக்கியம், மரபுகள் பற்றி அமையும் சான்றுகளைத் திரட்டி, அவற்றைக் கவிதைச் சுவையுடன் கலந்து வரலாற்றுக் காவியமாகத் தந்துள்ளார். அவர் கூறிய அடியார் வரலாறுகளின் உண்மைகளை மாற்றவோ மறுக்கவோ முற்படாமல் சைவ உலகம் ஏற்றுக் கொண்டு போற்றி வருகின்றது. இது சேக்கிழார் பெற்ற பெருஞ்சிறப் பாகும். சுந்தரர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய தேவார மூவர்களைப் போலவே சமய வாழ்வும், இறையருளதுபவமும் சிறந்து, சைவ சமய நால்வருள் ஒருவராய்த் திகழும் மாணிக்கவாசகரின் வரலாறு சேக்கிழார் சுவாமிகளால் அருளப்படாமை சைவ உலகினுக் கோர் தவக்குறையேயாகும். அவர்தம் வரலாற்றை விளக்கும் புராணங்கள் கூறும் வரலாற்றுச் செய்திகளில் சில வேறுபாடுகள் அமையக் காண்கின்றோம். சேக்கிழார் சுவாமிகளால் ஐயந்திரிபுகட்கு இடமின்றி அமைக்கப் பட்டுள்ள திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு, அவர்தம் வாழ்வையும் வாக்கையும் பாவும் ஊடுமாய் இணைத்து வழங்கும் கவின்மிக்க கலைவண்ண ஒவிய எழினியாகத் திகழ் கின்றது. இதற்கு முன்னர்த் திருநாவுக்கரசர் வாழ்க்கை யினைப் பலர் வடித்துத் தந்துள்ளனர்; சிலர், சோதனைக் குழலில் இட்டுச் சோதித்து அதன் மாற்றுயர்ந்த மாண் பினைப் புலப்படுத்தியுள்ளனர். சேக்கிழார் சென்னெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/27&oldid=634274" இலிருந்து மீள்விக்கப்பட்டது