பக்கம்:நாவுக்கரசர்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 233

மனத்தகத்தான்; தலைமேலான்; வாக்கி னுள்ளான்;

வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான்; இமையவர்தஞ் சிரத்தின் மேலான்

ஏழண்டத் தப்ாபலான்; இப்பாற் செம்பொன் புனத்தகத்தான்; நறுங்கொன்றைப் போதி னுள்ளான்;

பொருப்பிடையான்; நெருப்பிடையான், காற்றி

லுள்ளான்; கனத்தகத்தான்; கயிலாயத் துச்சி யுள்ளான்; -

காளத்தி யானவனென் கண்ணு ளானே. (5) என்பன மூன்றாவது, ஐந்தாவது பாட்ல்கள். பாடல்களைப் பாடி அனுபவிக்க வேண்டும். -

காளத்தி மலைமீது இறைவனருகே நின்றருளும் அன் புருவாய கண்ணப்ப நாயனாருடைய கழலடிகளை இறைஞ்சித் தலைமீது கூப்பிய கையினராய்க் கண்ணிர் மல்கப் பணிந்து புறம்போந்து அம்மலைமேல் கைத்திருப் பணிகள் செய்து மகிழ்கின்றார். தென்கயிலை எனப் போற்றப்பெறும் திருக்காளத்தி மலைமேல் இறைவனைப் பணிந்த குறிப்பினால் வடதிசையில் உள்ள திருக்கயிலாய மலை இவர் நினைவில் எழுகின்றது; அங்கு எழுந்தருளி யிருக்கும் கயிலைநாதரின் திருக்கோலத்தைக் கண்டு களிக்க வேண்டும் என்னும் பெருவிருப்பம் உண்டாகின்றது. இதனைச் சேக்கிழார் பெரு மான், -

சேணிலவு திருமலையில் - திருப்பணியா யினசெய்து தாணுவினை அம்மலைமேல்

தாள்பணிந்த குறிப்பினால் பேணுதிருக் கயிலைமலை

வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது காதலித்தார்

கலைவாய்மைக் காவலனார். - என்று காட்டுவர். இந்த விருப்பம் எவ்வாறு நிறைவேறு கின்றது என்பதை அடுத்துக் காண்போம். 20. பெ. பு. திருநாவுக்கரசு.347

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/276&oldid=634282" இலிருந்து மீள்விக்கப்பட்டது