பக்கம்:நாவுக்கரசர்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத் திருப்பயணம் 241.

திருக்கயிலாயத்தில் செம்மேனி எம்மானாகிவ சிவ பெருமான் நீலமேனி நேரிழையாகிய உமையம்மையுடன் வீற்றிருந்தருளுகின்றார். இந்த அழகிய தெய்வக் காட்சி யைக் கண்டு மகிழும் த்ாவேந்தர் தலைமிசைக் கைகுவித்து நிலமிசை வீழ்ந்து பணிகின்றார்.18 வேறாகி விண்ணாகி’ (6.55) என்பது இவர் பணிந்து போற்றிய திருத்தாண்டகம். இதில்,

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி:

முன்னமே தோன்றி மூளைத்தாய் போற்றி: தேவாதி தேவர்தொழும் தேவே போற்றி;

சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி: ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி:

அல்லல் கலிய அலங்தேன் போற்றி: காவாய் கனகத் திரளே போற்றி:

கயிலை மலையானே போற்றி போற்றி. (9)

என்பது ஒன்பதாம் திருத்தாண்டகம். இப்பதிகத்தின் பதி னொரு பாடல்களையும் சேவித்து அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்டதால் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயல்வோமாக.

இதுபோன்று கயிலை பற்றிய வேறு இரண்டு தாண்டகப் பதிகங்கள் உள்ளன. இவற்றுள் முன்னே காட்டியதை அப்பர் பெருமான் கயிலைச் சாரலில் பாடிய தென்றும், அடியில் காட்டப்பெறும் இரண்டும் கயிலைக் காட்சி ஐயாற்றில் கிடைத்தபின் பாடியவை என்றும் கருது வர் சிவக் கவிமணி அவர்கள். இவற்றுள் பொறையுடைய பூமி’ (6.58) என்ற முதற் குறிப்புடைய பதிகத்தில்,

13. பெ. பு, திருநாவுக். (373-381),

நா-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/284&oldid=634291" இலிருந்து மீள்விக்கப்பட்டது