பக்கம்:நாவுக்கரசர்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத் திருப்பயணம் 245

வேறாகி விண்ணாகி நின்றாய் போற்றி;

மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி! (6.55:1)

என்று தாம் பாடிய போற்றித் திருத்தாண்டகத் தொட ராலும்,

வேற்று மாகிவிண் ணாகிநின் றார் மொழி விரும்பி

ஆற்றல் பெற்றஅவ் வண்ணலார்

அஞ்செழுத் தோதிப்

பாற்ற டம்புனற் பொய்கையில்

மூழ்கினார் பணியால். (370)

என்ற சேக்கிழார் வாக்கினாலும் தெளிவாகும். தவமுனிவ ராய் வந்த கயிலைநாதன் பணித்தவண்ணம் அவர் காட்டிய பொய்கையில் மூழ்கினமையால் காற்சுவடுபட நடக்காமல் தாம் திருவையாறு அடைந்தமையும், அங்கு வாழும் எல்லா உயிர்களும் சக்தியும் சிவமும் ஆக விளங்கிய தெய்வக் காட்சியைக் கண்டமையும் ஆகிய அற்புத நிகழ்ச்சியை,

ஏடுமதிக் கண்ணி யானை

ஏந்திழை யாளொடும் பாடிக் காடொடு நாடும் மலையும்

கைதொழு நாடா வருவேன் (4,3:5) எனவும்,

யாதும் சுவடு படாமல்

ஐயா ரடைகின்ற போது காதல் மடப்பிடி யோடும்

களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன் (4.3:1) எனவும் வருந் தொடர்களால் நன்கு புலப்படுத்துகின்றார் நாவேந்தர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/288&oldid=634295" இலிருந்து மீள்விக்கப்பட்டது