பக்கம்:நாவுக்கரசர்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நாவுக்கரசர்

கயிலைக் காட்சிகள்: இங்கு இரண்டு அற்புதக் காட்சி கள் சித்திரிக்கப்படுகின்றன. ஒன்று : வாகீசர் திருவையாற் றில் வாவியின் கரையேறியபோது நிற்பனவும் நடப்பனவும் யாவும் சிவசக்தியாகத் துணையொடு தோன்றிய காட்சி. ஐயாரடைகின்றபோது கண்டறியாதன கண்டேன்’ என்று பாடும் பதிகக் கருத்தையொட்டியே சேக்கிழார் பெருமான் இக்காட்சியைக் சித்திரிக்கின்றார். அப்பர் பெருமானின் அநுபூதிச் சிறப்பும் கயிலைநாதனின் பேரருளும் ஒருங்கே உடையது இத் தெய்வக் காட்சி.

இரண்டு , இக்காட்சி சிவனது கயிலைக் கோலம் பற் றியது. இமயத்தில் சிவபெருமானின் ஒலக்கச் சிறப்பை சித் திரித்துக் காட்டுவது. ஆளும் நாயகன் கயிலை இருக்கை’ காணவே ஆசைப்படுகின்றார் அப்பர். காளத்தியில் அரும் பிய இவ்வாசை வாக்கின் மன்னரை இமயம்வரை வழி யிட்டுச் செல்லுகின்றது. ஊனும் உடலும் நைந்த நிலையில் கூட கயிலைநாதன் மாதவ முனியாகி விளையாடுகின்றான். கயிலை இருக்கையை ஐயாற்றில் காணுமாறு பணிக்கின் றான். இறைவன் காட்டிய பொய்கையில் மூழ்கி ஐயாற்று வாவியில் எழுந்த அப்பரிடம் முதற் காட்சி சிவ சக்திக்’ காட்சியாகத் தென்படுகின்றது. ஐயாற்றுக் கோயிலை அப்பர் அடைந்தபோதுதான் இரண்டாவது அற்புதம் அவருக்குக் கிடைக்கின்றது. கயிலைக் கோலம் காண அவாவியவருக்குக் கிடைக்கும் காட்சி இதுவாகும்.

தத்துவம் : கண்ணால் காணும் உலகின் பன்மை யோனிகளில் இறைவன் உடனாகி நின்ற காட்சி முதற் காட்சி; இறைவன் காணப்படும் உலகினோடு உடனாகி நிற்பதேயல்லாமல் தனித்து வேறாகியும் நிற்பான்; இந்தக் காட்சியே இரண்டாவது காட்சி. இரண்டாவதாகக் காணப்பெறும் இக் கோயிற் காட்சியே கயிலைக் கோலம்’ பற்றியதாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/289&oldid=634296" இலிருந்து மீள்விக்கப்பட்டது