பக்கம்:நாவுக்கரசர்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நாவுக்கரசர்

ஐயாறப்பனைப் பல செந்தமிழ் மாலைகளால் வழிபடு கின்றார். சென்ற கட்டுரையில் மாதர் பிறைக் கண்ணி யானை (4.3) திருப்பதிகத்தைக் சேவித்தோம், அது திருக் கயிலாயக் காட்சிக்கு பின்னர்ப் பாடப்பெற்றது. இனி வழி படுவது திருவையாற்றிறைவனையே. ஆரார் திரிபுரம்’ (6.37) என்ற திருத்தாண்டகத்தால் வழிபாடு தொடங்கு கின்றார் வாகீசப் பெருமான். இதில், *...

விண்ணோர் தலைவனே என்றேன் நானே:

விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே; எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே;

யேகம்பம் மேயானே யென்றேன் நானே; பண்ணார் மறைபாடி யென்றேன் நானே; - பசுபதீ! பால்ற்ேறாய்! என்றேன் நானே;

அண்ணா! ஐயாறனே! என்றேன் நானே;

யென்றென்றே நானரற்றி நைகின் றேனே. (7) என்பது ஏழாவது தாண்டகம். என்றென்றே நான் அரற்றி நைகின்றேன்” என்று பாடல்தோறும் இறுவதால், பாட்டைப் பாடும்போது நாமும் உள்ளம் உருகி நைந்து அப்பர் பெருமானின் அநுபவத்தைப் பெறுகின்றோம்.

இதனையடுத்து ஓசையொலி யெலாம் (6.38) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் தாண்டக மாலையால் வழி படுகின்றார் திருவையாறகலாத செம்பொற் சோதியை. இதில், - -

ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே,

உலகுக் கொருவனாய் கின்றாய் நீயே, வாச மலரெலாம் ஆனாய் நீயே,

மலையான் மருகனாய் நின்றாய் நீயே, - நாயகியின் மூலத்தானத் திருமேனி மிகக் கம்பீரமானது. இசை மன்னர் தியாகராஜர் கோயில் ஆற்றங்கரையி லுள்ளது. தமிழ் - வடமொழிக் கல்லூரி இங்குள்ளது.

2, திருத்தாண்டகங்கள், திருக்குறுந் தொகைகள், திரு நேரிசைகள், திருவிருத்தங்கள். என்ற மாலைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/291&oldid=634299" இலிருந்து மீள்விக்கப்பட்டது