பக்கம்:நாவுக்கரசர்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள் 5

இவற்றையடுத்து மூன்று திருவிருத்தச் செந்தமிழ் மாலைகளைத் தொடுத்து ஐயன் ஐயாறனாரைத் தொழுது எத்துகின்றார். இவற்றுள் குறுவித்தவா (4.91) என்ற முதற் குறிப்புடையது முதலாவது மாலை. இதில்,

இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக் கழிவித்த வாகட்ட நோய்வினை

தீர்ப்பான் கலந்தருளி அழிவித்த வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்குளே தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. (5)

என்பது தமிழ்மணங் கமழும் ஐந்தாவது வாடா நறுமலர். இரண்டாவது திருவிருத்தச் செந்தமிழ் மாலை சிந்திப் பரிபன் (4.92) என்ற முதற் குறிப்புடையது. இதில்,

இருள்தரு துன்பப் படல

மறைப்பமெய்ஞ் ஞானமென்னுங் பொருள்தரு கண்ணிழந் துள்பொருள்

நாடிப் புகலிழந்த குருடரும் தம்மைப் பரவக்

கொடுநரகக் குழிகின்று அருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே.(4)

என்பது தமிழ்மணங் கமழும் நான்காவது வாடா நறுமலர். இம்மாலை பெரியது; இருபது மலர்கள் இதில் உள்ளன.” திருவையாற்றுப் பதிகங்களில் மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய்’ (தாண்டகம்) என்றெல்லாம் பாடுவதோடு,

3. சில படிகளில் 11.20 பாடல்கள் தனிப் பதிகமாகக் காணப்பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/294&oldid=634302" இலிருந்து மீள்விக்கப்பட்டது