பக்கம்:நாவுக்கரசர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள் 255

அறைகழலும் திருவடிமேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயரவரும் நட்டம் நின்ற

நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று

கினையுமா கினைந்தக்கால் உய்ய லாமே. (6)

என்பது ஆறாவது நறுமணம் கமழும் தமிழ் மலர். கயிலைக் கோலம் கண்டபின் நெய்தானம் வந்து பாடுகின்ற இப் பதிகங்களில் அப்பரது கயிலை சிந்தனை அதிகம் ஒடுவது தெரிகின்றது. திருவையாறு அகலாத செம் பொற்சோதி யின் நினைவும் அவர் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கழலடி இரண்டும் என் மேலவாய் இருக்கப்பெற்றேன்’, ‘நினையுமா நினைக்சின்றேனே” என்ற தொடர்களிலெல்லாம் இந்த சிந்தனை நிழலிடுவதைக் காணலாம்.

நெய்த்தானம் மேவிய ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருமழபாடி வருகின்றார் திருநாவுக்கரசர். ேேறறு திருமேனி (6.39) என்ற முதற் குறிப்புடைய செந் தமிழ்த் தாண்டக மாலையால் மழபாடி மன்னும் மணாளனை வழுத்துகின்றார். இதில்,

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்,

கிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்;

பாராகிப் பெளவமே ழானான் கண்டாய்;

பகலாகி வானாகி நின்றான் கண்டாய்;

5. மழபாடி விருத்தாசலம்-திருச்சி இருப்பூர்தி வழி யிலுள்ள புள்ளம்பாடி நிலையத்திலிருந்து 10 கல் தொலைவு. திருவையாற்றிலிருந்து 4 கல் தொலைவு. கொள்ளிட நதியைக் கடக்க வேண்டும். பங்குனி உத்தரத் தில் திருநந்திதேவர் திருக்கல்யாணத்தைத் திருவையாற்றி விருந்து ஐயாறப்பன் எழுந்தருளி வந்து நடத்தி வைக்கின் றார். திருநந்தி தேவரும் அவரது தேவியாரும் வெட்டி வேர்ச் சிவிகையில் முன் செல்லப் பின்னணியில் ஐயா றப்பரும் அறம் வளர்த்த நாயகியும் அழகிய கண்ணாடிச் சிவிகையில் எழுந்தருளி ஏழுர் வலம் வருவதுதான் மிகு புகழ் வாய்ந்த சப்த ஸ்தானப் பெருவிழா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/298&oldid=634306" இலிருந்து மீள்விக்கப்பட்டது