பக்கம்:நாவுக்கரசர்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள் 359

கள்; மடம் கட்டிக் கொண்டும், சில காலம் தங்கியும், மறக்க முடியாமல், பிரிந்து வர முடியாமல், சிவாதுபவத்துடன் பாடிய பாசுரங்களில்தான் அடிக்கீழ் இருப்போம் முத லான திருச் சொற்களால் இப்பெருமான் பாடியதை அறி கின்றோம்.

பின்னர் இத்தலத்திலேயே தங்கியிருந்து இறைவனை வழிபடும் ஆராக் காதலால் திங்களும் ஞாயிறும் தெரியும் படி வானுறவோங்கிய திருமடம் ஒன்றை அமைத்துக் கொண்டு பூந்துருத்தி மேயானை வழிபட்டுக் கொண் டிருக்கின்றார். இந்நாட்களில் பலவகைத் தாண்டகம், பரவு தனித் தாண்டகம், அடைவு திருத்தாண்டகம், திருவங்க மாலை முதலிய செந்தமிழ்ச் சொல் மாலை களால் சிவபெருமானை சேவித்துக் கொண்டிருக்கின்றார் . நாவுக்கரசர் இங்கனம் இருக்கும் நாட்களில் திருமறைக் காட்டில் இவரிடம் விடைபெற்றுச் சென்ற காழிப் பிள்ளையார் பாண்டிய நாட்டின தலைநகராகிய மதுரை யில் சமணர்களை வாதில் வென்று பாண்டியனது கூனை நிமிர்த்தருளித் தென்னாடெங்கும் திருநீற்றின் ஒளிபரப்பி அங்கிருந்து மீண்டு சோழநாட்டுத் திருத்தலங்களை வழி பட்டுக் கொண்டு வருபவர், அன்பிற் சிறந்த அப்பர் பெரு மானைக் காணும் பெருவிருப்புடன் அப்பர் எங்குற்றார்?” என வினவுகின்றார் அடியார்களை. அப்பர் பூந்துருத்தி யில் உள்ளார்’ என அடியார்கள் மறுமொழி கூறு கின்றார்கள். அதுகேட்ட ஆளுடைய பிள்ளையார் அடியார் கூட்டத்துடன் புறப்பட்டுத் திருப்பூந்துருத்தியின் அருகில் வந்தணைகின்றார்.

சம்பந்தப் பெருமான் திருப்பூந்துருத்தியருகில் வந்து கொண்டிருக்கின்றார் என்பதைக் கேள்வியுற்ற நாவுக்கரசர் பிள்ளையாரை எதிர்கொண்டு போற்ற விரும்பி முன் செல்லுகின்றார். தம்மை இன்னாரென ஒருவரும் இனம் கண்டு கொள்ளாத முறையில் அடியார் கூட்டத்தினுட்

9. டிெ. 390.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/302&oldid=634312" இலிருந்து மீள்விக்கப்பட்டது