பக்கம்:நாவுக்கரசர்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டி நாட்டுத் திருத்தல வழிபாடு 265

தாண்டகச் செந்தமிழ்ப் பதிகத்தால் திருப்பூவணத் திறை வனை வழுத்துகின்றார்.

செறிகழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;

திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்; நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்;

நெற்றிமேல் கண்தோன்றும்; பெற்றம் தோன்றும்; மறுபிறவி யறுத்தருளும் வகையும் தோன்றும்;

மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்; பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.(8)

என்பது இத் திருப்பதிகத்தின் எட்டாவது வாடா நறு மலர். பாடல்கள் முழுவதும் சிவபெருமானது வடிவழகும் ஆயுதங்கள் தாங்கி நிற்கும் அழகும், எம்பெருமானின் திருக் குணங்களின் செயல்களும் அற்புதமாகச் சித்திரித்துக் காட்டப் பெறுகின்றன. - -

திருப்பூவணத் திறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பர் பெருமான் திருவிராமேச்சுரத்திற்கு வருகின்றார். இராமலிங்கத்தின் மீது பாசமும் கழிக்க கில்லா’ (4.61) என்ற முதற் குறிப்பையுடைய செந்தமிழ்த் திருப்பதிகம் பாடி வழிபடுகின்றார்.

4. இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) : இருப்பூர்தி நிலை யத்திலிருந்து 1 கல் தொலைவிலுள்ளது. கடற்கரைத் தலம்; ஒரு தீவில் உள்ளது. மண்டபம் நிலையத்திலிருந்து பாம்பன் நிலையத்திற்கு இருப்பூர்திகள் போவதற்குப் பாலம் உள்ளது. காசிக்குச் செல்பவர்கள் கங்கை தீர்த்தம் கொண்டு வந்து இராமலிங்க மூர்த்தியைத் திருமுழுக் காட்டுவித்துக் காசிப் பயணத்தை முடிப்பது வழக்கமாக இருந்து வருகின்றது. உணவு விடுதிகளும் தங்கும் விடுதி களும் நிறைய உண்டு. செல்வர்கள் பல தங்கும் விடுதிகளை கட்டிப் போட்டுள்ளார்கள்; இவற்றில் இலவசமாகத் தங்கலாம். காசியிலிருந்து ஓர் இலிங்கம் கொணருமாறு அநுமனை அனுப்புகின்றார் இராமபிரான். காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/308&oldid=634319" இலிருந்து மீள்விக்கப்பட்டது