பக்கம்:நாவுக்கரசர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

அல்லல் இல்லை; அருவினை தானில்லை மல்குவெண் பிறைசூடும் மணாளனார் செல்வனார் திருவிேட்களம் கைதொழ வல்லராகில் வழியது காண்மினோ (A)

என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். அடுத்துத் திருக்கழிப் பாலைக்கு எழுந்தருளுகின்றார். வனபவள வாய் திறந்து (4.6) என்ற பதிகம் பாடிக் கழிப் பாலை இறைவனை வழிபடுகின்றார், இது நாயகி நிலையில் *தாய்ப்பாசுரமாக’ அமைந்துள்ளது. அதாவது, தாய் காதல் வயப்பட்ட தன்மிகள் நிலையை எடுத்துக் கூறுவதாகப் பாசுரம் நடக்கின்றது’.

தலப் பயணங்களை விளங்குங்கால், திரு. இரெட்டியார வர்கள் அமைத்துக் கொண்ட முறை இதுவாகும். இதில், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குச் செல்கின்றார், வழி பாட்டிற்குப் பின்னர் எந்த ஊருக்குப் பயணத்தைத் தொடர்கின்றார், பாடிய பதிகத்தின் தொடக்கம் என்ன, அப்பதிகத்தில் இடம் பெற்ற நயமிக்கதொரு பாடல் ஆகியன போன்ற விவரங்களைக் கொடுத்து விடுகின்றார். பதிக முதற் குறிப்பினைச் சுட்டும்போதும், பாடலை எடுத்துக் காட்டும்போதும் திருமுறையில் அவை அமைந் துள்ள இடத்தைக் கண்டறியும் வகையில், உரிய எண்ணினை, திருமுறை பதிகம் பாடல் ஆகியவற்றின் எண்களைப் பிறைக் கோட்டினுள் தந்துள்ளார். குறிப் பிட்ட ஒரு பாடலின் இருப்பிடத்தை அறிய விரும்பும் ஆய்வாளருக்கு இந்த விவரம், மூலத் திருமுறை நூலினுள் தேடவேண்டாது காண உதவும் அருங்குறிப்பாகும். ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் எடுத்துக்காட்டாகக் காட்டப் பெறும் முழுப்பாடல், தேவாரப் பதிகப் பாடலைச் கவைக்க விரும்பும் இலக்கிய விரும்பிகளுக்கு நல்ல தீனியாக அமைகின்றது. தாய்ப் பாசுரமாக அமைந்துள்ளது என்பது போலக் காட்டப்படும் பதிகக் கருத்து விளக்கம் இலக்சியச் சுவைஞர்களுக்கு அளித்த கவைக் குளிகையாகும்.

தலங்களைப் பற்றிய விவரங்களை நூலின் ஊடே தந்து நூலோட்டத்திற்கு ஊறு விளைக்காமல், அவ்வப் பதிகத்தின் அடியில் அடிக்குறிப்பெண் இட்டுக் கொடுத் திருப்பது இந்நூலின் சிறப்பாகும். ஊர்பற்றிய விவரங் களைத் தேவைப்படுவோர் தேடிச் செல்ல வேண்டாது ஆங்காங்கே அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்த இம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/31&oldid=634321" இலிருந்து மீள்விக்கப்பட்டது