பக்கம்:நாவுக்கரசர்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடிப் பேறு 27i

நாவுக்கரசரின் நெஞ்சுறுதி : அப்பர் பெருமானின் உள் ளத்துறுதியை உலகத்தார்க்குத் தெளிவாகப் புலப்படுத்தத் திருவுள்ளங் கொள்ளுகின்றான் கயிலைநாதன். அப்பர் உழவாரத் தொண்டு புரியுங்கால் அவ்வுழவாரம் நுழைந்த இடங்களிலெல்லாம் பொன்னும் நவமணிகளும் வெளிப் பட்டு மின்னித் தோன்றும்படிச் செய்கின்றான். ஒடும் செம் பொனும் ஒக்கவே நோக்கும் உரவோராகிய நாவேந்தர் அவற்றைப் பருக்கைக் கற்களோடு கற்களாக நினைந்து உழவாரப்படையால் ஏந்திப் புது மலர்கள் பூக்கும் பூங்கமல வாவியில் புகுமாறு வீசி எறிகினறார்.

புல்லுக்கும் கல்லிற்கும் பொன்னுக்கும் மணிக்கும் *சொல் அளவில் கூட வேறுபாடு காணாத உயர்ந்த பக்குவ நிலையிலிருக்கும் சொல்வேந்தர் முன்னே புகலூர் இறைவனின் திருவருளால் வில்லும் தோற்றோடும் அழகிய புருவங்கள் அசையும் நெற்றியினையுடைய அரம்பை ஊர்வசி முதலிய தேவமாதர்கள் மின்னற் கொடிகள்போல் விண்ணினின்றும் இழிந்து வருகின்றனர். இவர்கள் அப்பர் பெருமானின் திருமுன்னர் நின்று இன்னிசை பொருந்தப் பாடுகின்றனர்; இன்பச் சுலையினைப் புலப்படுத்தும் ஆடல்களை இயற்றுகின்றனர்: அடிகள் மீது மலர்களை மழைபோல் துரவுகின்றனர். அவரை அணைபவர் போன்று அணுகியும், கூந்தல் அவிழ இடை நுடங்க ஓடியும் மீண்டும் அவரை நெருங்கியும், காம இச்சை பெருகும்படி உடைகள் நழுவ ஒளியுடன் நின்று பலவிதச் சாகசச் செயல்களைப் புரி கின்றனர்.

இறைவன் திருவடிகளை மறவாது நினைந்து போற்றும் மெய்யுணர்வுடைய தவச் செல்வராகிய நாவுக் கரசர் தம் ஒருமை நிலையில் சிறிதும் பிறழாது தாம் செய் யும் பணியில் உறைப்புடையவராகத் திகழ்கின்றார். மாயையின் தொடர்புடைய இந்தப் பிறவியில் மீண்டும் மீண்டும் ஆருயிர்களை அழுத்தும் இரு வினைகளின் உருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/314&oldid=634326" இலிருந்து மீள்விக்கப்பட்டது