பக்கம்:நாவுக்கரசர்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடிப் பேறு 273

மேயாது உள்ளே ஒடுங்கப்பெற்று இறைவன் திருவடியைத் தலைப்படும் செவ்வியினை எய்துகின்றார். புகலூர்ப் புனிதன் அடியவனாகிய எளியேனை இனித் தன் திருவடி யின்கண் இருத்தி அருள் புரிவன்’ என்னும் முன்னுணர்ச்சி மூளப்பெற்றுப் பல திருவிருத்தங்களைப் பாடிப் போற்று கின்றார். இது,

தன்னைச் சரணென்று தாளடைங் தேன்றன் அடியடையப் புன்னைப் பொழில்புக லுரண்ணல்

செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத தேழ்நரகத்(து) என்னைக் கிடக்கலொட் டான் சிவ

லோகத் திருத்திடுமே. (4.108:1) என்ற திருவிருத்தத்தால் இனிது தெளியப்படும்.

இந்நிலையில் மண் முதலான எல்லா உலகமும் வணங்கி வாழ்த்தி வணங்க புகலூர்ப் பெருமானை நோக்கி ‘எண்ணுகேன் எனச் சொல்லி (6.99) என்ற திருத்தாண் டகத்தைப் பாடிப் போற்றுகின்றார். புண்ணியத்தின் உருவாக விளங்கும் எம் பெருமானே, உன்னுடைய திரு வடிக்கே எளியேனும் வருகின்றேன்’ என நெஞ்சம் கசிந் துருகி வேண்டும் நிலையில், -

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்

கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே (1) நா.-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/316&oldid=634329" இலிருந்து மீள்விக்கப்பட்டது