பக்கம்:நாவுக்கரசர்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு பொதுப் பதிகங்கள் 277

என்பது பத்தாவது பாடல், புகலாகச் சென்று சேர்தற்குரிய தலங்களைப் பாடும் பதிகம். உயிர்கள் சென்றடைகிற தலங்கள் பலவற்றையும் அடைவுபடத் தொகுத்துறைத் தவின் அடைவுத் திருத்தாண்டகம் ஆகிறது. இதுபோலவே இப்பதிகம் பள்ளி (1), வீரட்டம் (2), குடி (3), ஊர் (4), கோயில் (5), காடு (6) வாயில் (7), ஈச்சுரம் (8), மலைத் தலங்கள் (9), ஆறு, குளம், கா, களம் (10), துறை (11) எனத் திருப்பெயரோடு சேர்ந்து முடிகின்ற தலங்கள் ஒவ்வொன்றையும் பாடுகின்றது. இவ்வாறு பெயர் முடிவு பற்றித் தொகுத்துப் பாடுவது நிகண்டுப் பதிகம்” நினைவு படுத்திப் பாட எளிதாகும். ஊரும் பேரும் அறிய உதவுவது.

‘தலையே வேணங்காய்’ (4.9) என்று தொடங்கும் பதிகத்தில்,

வாயே வாழ்த்து கண்டாய்-மத யானை யுரி போர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பிரான் தன்னை

வாயே வாழ்த்து கண்டாய். (5)

என்பது ஐந்தாவது பாடல். இஃது அங்கங்களின் தொழில் கூறும் அற்புதப் பதிகம். இது பூந்துருத்தியில் பாடப்பெற்ற தாகச் சேக்கிழார்தான் முதன் முதலில் கூறுகின்றார். பொதுப்பதிகங்களில் உள்ள இத்திருக் குறுந்தொகைகளில் வகை வகையாகப் பல நிலையில் பாடப்பெற்ற போக்குகள் தெரிவதால் பன்மைத் தொகை’ எனச் சேக்கிழார் கூற்றை அடிப்படையாக வைத்துச் சிவக்கவிமணி இவற்றைப் பூந்துருத்திக் குறுந்தொகைகளாகப் பொருத்திக் காண்பர்.

ஒன்று வெண்பிறை (5.89) என்ற முதற்குறிப்பினை யுடைய குறுந்தொகைப் பதிகத்தில், - - .

1. பூம்புகார்ப் பேரவைக் கல்லூரி வெளியீடு: அப்பர் பெருமான் வாழ்வும் வாக்கும்-பக் 703 காண்க, .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/320&oldid=634335" இலிருந்து மீள்விக்கப்பட்டது