பக்கம்:நாவுக்கரசர்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு. பொதுப் பதிகங்கள் 279

என்பது நான்காம் பாடல். ‘மறக்கிற்பனே’ என்று ஒவ் வொரு பாடலும் முடிவதால் மறக்கிற்பனே’ எனும் திருக் குறுந்தொகை ஆகின்றது. -

‘அண்டத்தானை’ (5.94) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந்தொகையில்,

ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழும் கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை மூலத் தானை முதல்வனை மூவிலைச் சூலத் தானைக்கண் டிர்தொழற் பாலதே. (7)

என்பது ஏழாவது பாடல். ஒவ்வொரு பாடலும் தொழிற் பாலதே’ என இறுவதால் தொழற் பாலனே’ என்னும் திருக்குறுந் தொகை என்ற பெயர் பெற்றது.

‘புக்கணைந்து (5.95) என்று தொடங்கும் பதிகத்தில்,

எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் தருக்கி னாற்சென்று தாழ்சடை அண்ணலை நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே. (5)

இது ஐந்தாவது பாடல். இதில் ஒவ்வொரு பாடலும் காணலுற்றாரங் கிருவரே என்று முடிவது. இலிங்க தத்து வத்தின் உண்மையை வடித்துத் தருவது. எனவே இலிங்க புராணத் திருக்குறுந்தொகை” என்று பெயர் பெறுகின்றது.

“பொன்னுள்ளத்திரள் (5.96) என்று தொடங்கும் பதி கத்தில்,

பொன்னுள்ளத்திரள் புன்சடை யின்புரம்

பின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை

கின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்

என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/322&oldid=634338" இலிருந்து மீள்விக்கப்பட்டது