பக்கம்:நாவுக்கரசர்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு பொதுப் பதிகங்கள் 281

‘பாவமும் பழிபற்றற’ (5.99) என்ற முதற் குறிப்புடைய குறுந்தொகைப் பதிகத்தில், -

வேதம் ஒதிலென்? வேள்விகள் செய்கிலென்? நீதி நூல்பல கித்தல் பயிற்றிலென்? ஓதி யங்கமோ ராறும் உணரிலென்? ஈசனை யுள்குவார்க் கன்றி யில்லையே. (4) என்பது நான்காவது பாடல். இப்பதிகம் இறைவனை உள்ளத்தால் நினைந்து வாழ்த்தி வணங்கினார்க்கே பாவம் நீங்குமென்று பாடியது. ஆகவே இது பாவநாசத் திருக்குறுந்தொகை எனப் பெயர் பெறுகின்றது. இதிலுள்ள பாடல்கள் யாவும் உள்ளத்தை உருக்குபவை.

வேதநாயகன் (5.100) என்ற முதற் குறிப்புடைய பதி, கத்தில்,

கூவ லாமை குரைகட லாமையைக் கூவ லோடொக்கு மோகட லென்றல்போல் பாவ காரிகள் பார்ப்பரி. தென்பரால் தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே. (5) என்பது ஐந்தாவ்து பாடல். முன்னைப் பழம் பொருட்கும் முதல்வனான சிவபெருமானை எத்தேவர்க்கும் முதல்வன் எனப் பரவிப் போற்றுவதால் இஃது ஆதி புராணத் திருக் குறுந்தொகை எனப் பெயர் பெறுகின்றது.

புகலூர் வாழ்வில் : அப்பர் பெருமான் தம் இறுதிக் காலத்தில் புகலூரில் தங்கியிருந்தபோது பாடிய பொதுப் பதிகங்கள் உள்ளன. தில்லைத் சிற்றம்பலவன்’ (6.10) என்று தொடங்கும் பதிகத்தில், -

நறையூரிற் சித்தீச் சரம்கள் ளாறு

நாரையூர் நாகேச்சரம் கல்லூர் நல்ல

துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை

தோணிபுரம் துருத்தி சோtச் சரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/324&oldid=634340" இலிருந்து மீள்விக்கப்பட்டது