பக்கம்:நாவுக்கரசர்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நாவுக்கரசர்

உறையூர் கடலொற்றி யூரூற் றத்துளர்

ஒமாம் புலியூர் ஓர்ஏட கத்தும்

கறையூர் கருப்பறியல் கன்றாப் பூரும்

கயிலாய காதனையே காண லாமே. (10)

என்பது பத்தாவது பாடல். ஆலயங்களை அரன் எனத் தொழும் போக்கில் பாடியது. திருத்தலங்கள் கோவைப் படுத்திப் பாடப்பெற்றதால் கூேத்திரக் கோவைத் திருத் தாண்டகம்’ எனப் பெயர் பெறுகின்றது. இவ்விடத்தில் அடைவுத் திருத்தாண்டகத்தில் (6.71) ஊர், ஆறு, குடி, பள்ளி போன்ற தலங்களை அடைவுபடுத்திப் பாடப் பெற் றுள்ள பதிகத்தை நினைத்தல் தகும். - -

‘வென்றிலேன்’ (4.78) என்று தொடங்கும் திரு நேரிசைப் பதிகத்தில், .

வென்றிலேன் புலன்க ளைந்தும்

வென்றவர் வளாகக் தன்னுள் சென்றிலே னாத லாலே -

செந்நெறி அதற்குஞ் சேயேன் நின்றுளே துளும்பு கின்றேன்

நீசனேன். ஈச னேயோ இன்றுளேன் நாளை இல்லேன்

என்செய்வான் தோன்றி னேனே. (1)

என்பது முதல் பாடல். இறைவனை நோக்கிக் குறையிரந்த முறையில் அமைந்திருப்பதால் குறைந்த நேரிசை’ எனப் பெயர் பெறுகின்றது. தம்மானம் காப்பதாகி (4.79) என்ற திருநேரிசையும் இவ்வகையைச் சேர்ந்ததே.

‘தொண்டனேன்’ (4.75) என்ற முதற் குறிப்புடைய பதிகத்தில், - * . . . ... r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/325&oldid=634341" இலிருந்து மீள்விக்கப்பட்டது