பக்கம்:நாவுக்கரசர்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நாவுக்கரசர்

வடிவுடை வாள்நெடுங்கண் உமையாளை

ஓர்பால் மகிழ்ந்து - வெடிகொள் அரவொடு வேங்கை அதள்

கொண்டு மேல்மருவிப் பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந்தன்ன

பைங்கொன்றை யந்தார் அடிகள் அடிநிழற் கீழதன்றோ

என்றன் ஆருயிரே.. (A)

என்பது நான்காம் திருவிருத்தம். ஒவ்வொரு பாடலும் *(சிவபெருமானின்) அடிநிழற் கீழதன்றே என்றன் ஆருயிரே” என்று முடிவதால் இஃது ஆருயிர்த் திருவிருத் தம்’ என்ற பெயரைப் பெறுகின்றது. •

‘பருவரை யொன்று’ (4,14) என்று தொடங்கும் பதிகத்தில்,

காலமு நாள்கள் ஊழியடையா முன்ஏக

உருவா கிமூவர் உருவில்

சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்

- உருவாகி கின்ற தழலோன்

ஞாலமு மேலை விண்ணோடு லகேழுமுண்டு

குறளாய் ஓராலின் இலைமேல்

பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி யவனாம் நமக்கோர் சரனே. (3)

என்பது மூன்றாம் பாடல். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் சிவனது வீரம்பற்றிய ஒவ்வொரு புராணச் செய்தியினைப் போற்றுவதால் இது தசபுராணத் தடைவு’ என்ற பெயரைப் பெறுகின்றது. -

“பற்றற்றார் சேர்’ (4.15) என்று தொடங்கும் பதிகத் தின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/327&oldid=634343" இலிருந்து மீள்விக்கப்பட்டது