பக்கம்:நாவுக்கரசர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX

செய்ய விரும்புவோருக்கு அரியதொரு வழிகாட்டியாய் . விளக்க ஏடாப் - இந்நூல் விளங்குகின்றது.

சுந்தரர் முற்பிறப்பு வரலாறு சேக்கிழாரால் வெளிப் படப் கூறப்பட்டுள்ளமைபோல, தாவுக்கரசரின் முன்னை வரலாறு பெரிய புராணத்தில் கூறப்படவில்லை. எனினும் அதுபற்றிச் சில கதைகள் வழங்கி வருகின்றன, இந்நூலா சிரியர், உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எமை யடையத் தவ முயன்றான்’ என்று இறைவாக்காக வரும் தொடரும், பண்டுபுரி நற்றவத்துப் பழுதின் அளவு இறை வழுவும் தொண்டர்’ என்ற தொடரும் இப்புனைவுகளுக்கு வித்துக்களாக அமைகின்றன என்று சுட்டி, அக்கதைகளை யும் இந்நூலில் காட்டியுள்ளார் (பக். 8, 9.). அக்கதை ஒன்றில், இராவணன் அநுபவித்து எஞ்சிய துன்பத்தை நீ அநுபவித்து எம்மை அடைவாயாக’ என்பது இறைவன் கட்டளையாக அமைகின்றது’ என்று இவ்வாசிரியர் காட்டியிருப்பது பொருந்தப் புனைவு வகையினைச் சார்ந்ததாகும்.

பதிகப் பாடலின் கருத்தினை விளக்கிச் செல்லுகையில், மரபான விளக்கத்தோடு, இன்றைய உலகியலுக்குப் பொருந்தும் வகையில் விளக்கிச் செல்வது திரு. இரெட்டி யாரவர்களிடம் காணப்படும் ஒரு சிறப்பாகும். கடம்பூர்ப் பதிகத்தினைச் சுட்டி அதிலமைந்துள்ள, நங்கடம்பனைப் பெற்றவன் பங்கினன்’ என்னும் பாடல் இக்கால நிலைக்குப் பொருந்துமாற்றை விளக்கிக் காட்டியிருப்பது அதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டாகும் (பக். 92). அப்பாடலில் *தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே’ என வரும் அடிகளை இக்காலக் குடியரசு ஆட்சிக்குப் பொருந்துமாறு விளக்கியுள்ளார்.

அகத்துறைக் கருத்தமைந்த பாடல்களை விளக்கும் போது, அப்பாடலுக்கேற்ப வன பவள வாய் திறந்து” எனத் தொடங்கும் பாடல் நாயகி நிலையில் தாய்ப்பா சுரம்” (பக். 33) என்றும், வஞ்சித் தென் வளை கவர்த் தவன்’ எனத் தொடங்கும் பாடல் மகள் பாசுரம்” (ப. 118) என்றும் குறிப்பிட்டுச் செல்வது, ஆழ்வார் பாசுரங்களுக்கு அமைந்துள்ள வியாக்கியானங்களை ஆசிரியர் பயின்றதன் பயனாகும். ஆழ்வார் பாசுரங்களைப் பயின்ற சுவை முதிர்ச்சியால் இவர், உருகுமணத் தடியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/33&oldid=634347" இலிருந்து மீள்விக்கப்பட்டது