பக்கம்:நாவுக்கரசர்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நாவுக்கரசர்

ஆறுடைய சடையுண்டோ? அரவ முண்டோ?

அதனருகே பிறையுண்டோ? அளவி லாத

ஏறுடைய கொடியுண்டோ? இலய முண்டோ?

எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே. (5)

என்பது ஐந்தாம் பாடல். முதல் ஐந்து பாடல்களும் வினா வாக அமைந்துள்ளன. ஆறுமுதல் பதினொன்றுவரை விடையாக அமைந்துள்ளன.

நீரேறு திருமேனி நிகழக் கண்டேன்;

நீள்சடைமேல் கிறைகங்கை யேறக் கண்டேன்; கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்;

கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்; ஆறேறு சென் னியனி மதியும் கண்டேன்;

அடியார்கட் காரழுத மாகக் கண்டேன்; ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்;

இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே. (8)

என்பது எட்டாவது பாடல். இது விடையாக அமைந்திருப் பதைக் காணலாம்.

இங்கனம் நாவுக்கரசரின் பொதுப்பதிகங்கள் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டிலங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/331&oldid=634349" இலிருந்து மீள்விக்கப்பட்டது