பக்கம்:நாவுக்கரசர்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29() . நாவுக்கரசர்

பல நிகழும் வண்ணம் பாடப்பெற்ற திருப்பதிகங்கள் அற்புதத் திருப்பதிகங்களாகும். கூற்றாயினவாறு விலக்க கி.வீர்’ என்ற திருப்பதிகம் அற்புதத் திருப்பதிகம். இது நான்காம் திருமுறையில் முதற்பதிகமாக அமைந்தது. ஐந்தாம் திருமுறையில் அன்னம்பாலிக்கும் என்ற கோயில் திருப்பதிகம் முதலில் வைக்கப் பெற்றது; அங்ஙனமே ‘அரியானை’ என்ற கோயில் பெரியதாண்டகம் முதலாக அமைந்தது. இறைவன் திருவடி நீழலை எய்தி இன்புறும் நிலையில் பாடிய எண்ணுகேன என் சொல்லி எண்ணு கேனோ? என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் ஆறாம் திரு முறையின் இறுதிக்கண் அமைந்தது. .

நான்காம் திருமுறை

இதில் 113 திருப்பதிகங்கள் உள்ளன. இதில் முதற் பதிகம் கொல்லிப்பண்ணுக்குரியது. 2 முதல் 7 வரையி லுள்ள பதிகங்கள் காந்தாரப் பண்ணுக்குரியவை; எட்டா வது பதிகம்பியந்தைக் காந்தாரமாகும். ஒன்பதாம் பதிகம் சாதாரிப் பண்ணுக்கு உரியது. 10, 11 எண்ணுள்ள பதிகங்கள் காந்தார பஞ்சமம் என்ற பண்ணில் அமைந் தவை. 12, 13 ஆம் பதிகங்கள் பழந்தக்க ராகம் என்ற பண்ணுக்குரியன. 14, 15 ஆம் பதிகங்கள். பழம் பஞ்சுரம்’ என்ற பண்ணுக்கு உரியன. 16 முதல் 18 வரையிலுள்ள பதிகங்கள் மூன்றும் இந்தளப் பண் ணில் அமைந்தவை. 19, 20-ஆம் பதிகங்கள் சீகாமரப் பண்ணுக்குரியன. 21. ஆம் பதிகம் குறிஞ்சிப்பண்ணுக்கு உரியது, இவை சம்பந்தர், அப்பர் ஆகிய இருவர் பாடியுள்ள பதிகங்களை யொத்துப் பண்ணமைந்துள்ளன. இந்தப்பத்துப் பண்களும் திரு நேரிசை, திருவிருத்தம் என்னும் யாப்பியல் விகற்பம் அமைந்த திருப்பதிகங்களும் இந் நான்காம் திருமுறையில் அடங்கும். இவற்றுள் திருநேரிசை நேரிசைக் கொல்லி எனவும், திருவிருத்தம் விருத்தக் கொல்வி எனவும் கொல்லிப் பண்ணில் அடக்குதல் மரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/333&oldid=634351" இலிருந்து மீள்விக்கப்பட்டது