பக்கம்:நாவுக்கரசர்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 291

திருநேரிசை; இத்திருமுறையில் 22 முதல் 79 வரை முடியவுள்ள பதிகங்கள் திருநேரிசைப் பதிகங்கள். திரு நேரிசை என்பது கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா’ எனவரும்கட்டளையடியினையுடைய செய்யுளாகும். வண்டுகள் நறுமலர்களில் மகரந்தப் பொடியையும் தேனை யும் மாந்தி அம்மலர்களில் படிந்து இடையீடின்றி முரல்வது போலும் நேரிய இசையமைந்த திருப்பாடல்கள் நேரிசை என்று பெயர் பெறுவன என்பது நேரிசை பற்றிய துண்ணிய கருத்தாகும். தேவாரத்தில் வரும் இந்நேரிசை யாப்பும் திவ்வியப் பிரபந்தங்களில் வரும் திருக்குறுந்தாண்டக யாப்பும் ஒனறே என்பது இவ்விருபனுவல்களிலும் வரும் திருப்பாடல்களை ஒப்பு நோக்குவதால் அறியப்படும்.

திருவிருத்தம்: நான்காம் திருமுறையில் 80 முதல் 113 வரையுள்ள பதிகங்கள் கட்டளைக் கலித்துறையாப்பாகிய திருவிருத்தப் பதிகங்கள். ஐஞ்சீரடி நானகாய், அடி தோறும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் நிற்க, ஐந்தாம் சீராகிய இறுதிச் சீர் கூவிளங்காய், கருவிளங் காய் என்னும் சீர்களுள் ஒன்றாகப் பெற்று, முதற்சீரின் முதலசை நேரசையாயின் ஓரடிக்கு எழுத்துப்பதினாறும், நிரையசையாயின் பதினேழெழுத்தும் உடையதாய் வரும் செய்யுள் கட்டளைக் கலித்துறை என்று சொல்லப் படும். இது தொல்காப்பியத்தில் கூறப்பெறும் யாப்பிலக் கணப்படி ஐஞ்சீர் நான்கடியான் வந்த தரவு கொச்சகம் எனப்படும்.

விருத்தம்’ என்பது வடசொல். இச்சொல்லுக்குரிய பல பொருள்களுள் ஒன்றன் நிகழ்ச்சி அல்லது விருத்தாந்தம் என்பதும் ஒரு பொருளாகும். அப்பர் பெருமான் இறை வனிடம் முறையிட்டுத் தெரிவித்துக் கொள்ளுதற்குரிய செய்திகளாகவும் இறைவன் செய்தருளிய செயல்களாக உலகத்தார்கட்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகளாகவும் அமைந்த திருத்தகவினவாகிய நிகழ்ச்சிகளைப் புலப்படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/334&oldid=634352" இலிருந்து மீள்விக்கப்பட்டது