பக்கம்:நாவுக்கரசர்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நாவுக்கரசர்

தும் நிலையில் அமைந்தவை இத் திருப்பதிகங்களாதலின் இவை திருவிருத்தம் என வழங்கப் பெற்றன என்பது அறிதற்பாலது. இவ்வாறே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களுள் ஒருவராகிய நம்மாழ்வார் இறை வனை நோக்கி விண்ணப்பம் செய்யும் முறையில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அருளிய பனுவல் திருவிருத்தம் என்ற பெயரால் வழங்குதல் ஈண்டு நினைவுகூரத்தகும்.

- ஐந்தாம் திருமுறை

திருக்குறுந்தொகை யாப்பிலமைந்த திருப்பதிகங்கள் நூறு கொண்டது ஐந்தாம் திருமுறையாகும். குறுந்தொகை யாப்பு என்பது நாற்சீர் நாலடியாய் அடிதோறும் தேமா, புளிமா என்னும் மாச்சீர்களுள் ஒன்று முதற்சீராகவும், கருவிளம், கூவிளம் என்னும் விளச்சீர்களுள் ஒன்று நான் காம் சீராகவும் இடையிலுள்ள இரண்டு மூன்றாஞ்சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும், சிறுபான்மை மாச்சீர் களாகவும் வரும் செய்யுள் விகற்பமாகும். முதற்சீர் தேமா வாயின் அடியின் எழுத்துத்தொகை ஒன்று நீக்கிப் பதி னொன்றாகும்; புளிமாவாயின் அத்தொகை பன்னிரண் டாகும். . - - -

சிவபெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ள தலங்களில் கைத்தொண்டு புரியும் கடமையினை மேற்கொண்ட அப்பர் பெருமான் இறைவனது பேரருளை நினைந்து நடந்து செல்லும் பொழுதும், திருக் கோயில் களில் உழவாரத் தொண்டு முதலிய திருப்பணிகளைச் செய்யும் போதும், தம் பெருமானாகிய இறைவனை முன்னிலையாக்கிப் போற்றும் நிலையிலும், அவ்விறை வனது புகழை நம்போலியருக்கு எடுத்துரைக்கும் நிலையி லும் பாடிப் பரவிப் போற்றுதற்கேற்ற் சந்தமாக இத்திருக் குறுந்தொகை யாப்பு அமைந்திருத்தலைக் கண்டு மகிழ லாம். - * : - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/335&oldid=634353" இலிருந்து மீள்விக்கப்பட்டது