பக்கம்:நாவுக்கரசர்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் . 295

செய்து வைத்துள்ளான். இறைவனது இத்திருக்குறிப்பை நன்கு உணர்ந்து தெளிந்து இரவலர்க்கு ஈந்து மகிழும் ஈகைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை,

இரப்பவர்க் கீய வைத்தார்;

ஈபவர்க் கருளும் வைத்தார்;

கரப்பவர் தங்கட் கெல்லாம்

கடுநர கங்கள் வைத்தார். (4.88:10)

என்ற திருநேரிசைப் பகுதியால் புலப்படுத்துவர். இப் பாடல் செல்வம், நல்குரவு என்னும் மேடு பள்ளங்களில் சிக்கிக் களிப்பும் கவர்ச்சியும் கொண்டு தம்முணர்வு இழந்து தடுமாறும் உலக மக்களுக்குக் கூறும் அறவுரையாகத் திகழ் கின்றது. .

(2) இறைவனை வழிபடுங்கால், அப்பெருமான் வழி படுவோர் மனத்தையே கோயிலாகக் கொண்டு எழுந் தருளித் தன் எளிமைத் திறத்தைப் புலப்படுத்துவான்: எழுந்தருளும் போது உறுதிப் பொருளையும் அறிவுறுத்து வான். உள்ளமெனும் அகலில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி உயிராகிய திரியில் ஞானத் தீக்கொளுத்தி, ஒன்றி நினைக்கும்போது அவனைக் காணலாம் (4.75:4). உடம் பென்னும் கோயிலில் மனமாகிய இலிங்கத்திற்கு நேய மென்னும் நீராட்டிப் பூசை செய்யலாம் என்று அகப்பூசை செய்யும் முறையினைப் புலப்படுத்துவார் (4.76:4) அடிகள். இறைவனைப் போதோடு நீர் சுமந்தேத்திப் புறத்தே வழி பாடு செய்வோர் வழிபாட்டின் முடிவில் முதல்வனைத் தம் உள்ளத்தே ஒடுக்கிச் சிந்தித்துப் போற்ற வேண்டும் (4.7:1); ஐம்புலனையும் அகத்தடக்கி எப்போதும் இனி யானைக் காணவேண்டும் (4.7:3).

(3) ஐந்தெழுத்தின் சிறப்பைப் பல திருப்பாடல்களில் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நாவுக்கரசர் பெருமான். அருந்தவம் நல்கும் அஞ்செழுத்தினை ஓதி உலக மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/338&oldid=634356" இலிருந்து மீள்விக்கப்பட்டது