பக்கம்:நாவுக்கரசர்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 299

சங்கநிதி பதுமகிதி இரண்டும் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்

மாதேவர்க் கேகாந்தர் அல்ல ராகில்; அங்கமெலாம் குறைந்தழுகு தொழுகோ யராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே (8.9.5:10)

என்ற பொதுத் தாண்டக மொன்றில் நிலை நாட்டுவர்.

(5) நாவுக்கரசர் பெருமான் தம் காலத்திற்கு முன் தோன்றிய சைவப் பெருமக்களையும் தம் காலத்தில் உடன் வாழ்ந்த நாயன்மார்களையும் சிறப்பித்துப் போற்றியுள் grrrrrr.

“. . . . . . . . . . . . கல்லூரகத்தே கீட்கொண்ட கோவணங் காவென்று

சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியோடும்

அங்கோர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை யுரைக்கு

மன்றோ இவ்வகலிடமே (4.97:7)

என்ற பாடற் பகுதியிலுள்ள குறிப்பு அமர்நீதி நாயனாரைப் பற்றியது. நல்லருந்தவத்த கணம் புல்லர் (4.49:9) என்ற பாடற் குறிப்பு கணம் புல்லர் என்பாரைப் பற்றியது.

காப்பதோர் வில்லும் அம்பும்

கையதோர் இறைச்சி பாரம் தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்

தூயவாய்க் கலசம் ஆட்டித் தீப்பெருங் கண்கள் செய்ய

குருதிநீர் ஒழுகத் தன்கண் கோப்பதும் பற்றிக் கொண்டார். (4.49:7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/342&oldid=634361" இலிருந்து மீள்விக்கப்பட்டது