பக்கம்:நாவுக்கரசர்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நாவுக்கரசர்

என்ற திருதேரிசைப் பகுதியும்,

குவப் பெருங் தடக்கை வேடன்

கொடுஞ்சிலை இறைச்சி பாரம் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்

தூயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர

ஒருகனை யிடந்தங் கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் (4.65:8)

என்ற திருநேரிசைப் பகுதியும் கண்ணப்பரைப்பற்றியவை.

கல்லினால் எறிந்து கஞ்சி

தாமுணும் சாக்கி யனார் நெல்லினார் சோறு னாமே

நீள்வீசும் பாள வைத்தார். (4,49:6) என்ற குறுக்ல்க வீரட்டனாரைப் பற்றிய திருநேரிசைப் பகுதி சாக்கிய நாயனாரைப் பற்றியது. இவர்கள் யாவரும் வாகீசருக்கு முன்தோன்றிய பெருமக்கள்.

அப்பர் காலத்தவர் அப்பூதியடிகள் என்பதை நாம் அறி வோம். - - c. * அஞ்சிப்போய்க் கலிமெலிய

அழலோம்பும் அப்பூதி (4.12:10) என்ற பாடற் பகுதி இவ்வடியாரைப் பற்றியது.

ஆரூர் நறுமலர் நாதன் -

அடித்தொண்டன் நம்பிநந்தி (4.102:2) என்ற பாடற் பகுதியும், -

பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்.

பாதம் பொறுத்த பொற்பால் அடித்தொண்டன் நந்தியென் பான் (4.102:4) என்ற பாடற் பகுதியும் உடன் வாழ்ந்த நமிநந்தியடிகள் பற்றியவை, - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/343&oldid=634362" இலிருந்து மீள்விக்கப்பட்டது