பக்கம்:நாவுக்கரசர்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 - நாவுக்கரசர்

வாயிலும் அமைக்கின்றோம். பக்கச் சுவர்களில் காற்றோட் டம் இருப்பதற்காகப் பலகணிகளை அமைத்துக், கண்டோர் யாவரும் விரும்பிக் குடியேறுவதற்கேற்பக் கவர்ச்சியுடைய தாய்ச் செய்து முடிக்கின்றோம். இங்ஙனமே அருளாள னாகிய இறைவனும் உயிர்களாகிய நாம் விரும்பித் தங்கு தற்கேற்ற கவர்ச்சியுடையதாக மக்கள் யாக்கையாகிய இந்த உடம்பை நமக்குப் படைத்து வழங்கியுள்ளான். இதனைக் கால்கொடுத்திருகை’ (4.33:1) என்ற திருநேரிசை யில் சுவை பொருந்தக் காட்டுவர் நாவுக்கரசர். இங்ஙனம் ஆருயிர்களுக்கென ஆண்டவன் அமைத்த யாக்கையாகிய இந்த இல்லம், உயிர் மட்டுமே நிலையாய்த் தங்குவதற் கேற்ற சொந்த வீடாக அமையாமல், ஐம்பொறிகள் தங்கு தற்குரிய உரிமையிடமாகவும், அவ்வைம் பொறிகளுக் கிடையே உயிர் ஒதுக்குக் குடியிருக்க வேண்டிய துச்சிலாக வும் அமைந்து, உயிர் வாழ்வுக்குப் பலவகைத் துன்பங்களை யும் விளைப்பதாயினும், இக்குடிசையிற் புகுந்த உயிர் இதனை விட்டு மீள விரும்பாததொரு கவர்ச்சியினை இதற்கு உண்டாக்கி இக் குடிசையில் உயிர்களை இறைவன் குடியேற்றினான் என்பார், மால் கொடுத்து ஆவி வைத் தார் மாமறைக் காடனாரே’ என்று கூறுவார்.

மூன்றாவது நாவுக்கரசர் தொண்டு செய்வதில் சிறந்த உழவராகத் திகழ்ந்தவர்; உழவாரப்படையைத் தாங்கிக் கொண்டிருப்பவர். சிவகதியாகிய நற்பயிர் விளைவதற்கு உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் முறைகளை,

மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப்

பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு

தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் கிற்ப ராகிற்

சிவகதி விளையு மன்றே. (4.72:2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/345&oldid=634364" இலிருந்து மீள்விக்கப்பட்டது