பக்கம்:நாவுக்கரசர்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நாவுக்கரசர்

நல்லதோர் எடுத்துக்காட்டு. இதிலுள்ள இப்படியன்... காட்டொணாதே’ என்ற பகுதி ‘இறைவன் பாசஞான பசுஞானங்கட்கு அகப்படாதவன்’ என்பது பொருளாதலை அறிய வேண்டும். இங்ஙனம் அப்பர் பெருமானின் திருப் பாடல்களில் பல சித்தாந்த உண்மைகளையும் கண்டு தெளி யலாம்.

பதிகங்களின் சிறப்பியல்புகள்: அப்பர் பெருமான் அருளி யுள்ள ஏனைய இருவர் (சம்பந்தர், சுந்தரர்) பதிகங்களி லும் காணப்பெறாத திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை, திருத்தாண்டகம் என்னும் யாப்பு விகற்பங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நமக்குக் கிடைத்துள்ள 312 பதிகங்களுள் நான்காம் திருமுறையில் 1-21 பதிகங்கள் காழிப் பிள்ளையார், நம்பியாரூரர் ஆகிய இருவர் பாடிய பதிகங்களையொத்து அமைந்துள்ளன. ஏனைய 291 பதிகங்களும் மேற்குறிப்பிட்ட யாப்பு விகற்பங்களாய், அப்பர் பெருமானுக்கே யுரிய சொல் நடையின் சிறப்பியல் பினை விளக்கும் நிலையில் அமைந்துள்ளன.

நாவுக்கரசர் பெருமான் அருளிய பதிகங்களில் சொற் றுணை வேதியன் (4.11) என்னும் பதிகம் நமச்வாய’ என்னும் ஐந்தெழுத்தின் சிறப்பினை விளக்குவதாதலின் அது ‘நமச்சிவாயத் திருப்பதிகம்’ என்ற திருநாமம் பெறு கின்றது. பொருளமைப்பாற் பெயர் பெற்றவை: திருஅங்க மாலை (4.9), தசபுராணம் (4.14), குறைந்த நேரிசை (4.78:79) கால பாசத் திருக்குறுந்தொகை (5.95), புராணத் திருக்குறுந் தொகை (5.100), இலிங்க புராண ஆதித்திருக் குறுந்தொகை (5.95) பாவநாசத் திருக் குறுத்தொகை (5.99) பெரிய திருத்தாண்டகம் (6.1), மறுமாற்றத் திருத்தாண்டகம், அடைவுத் திருத்தாண் டகம் (6.71), வினாவிடைத் திருத்தாண்டகம் (6.97), அடையாளத் தி ரு த் தாண்ட கம் என்பன. பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/347&oldid=634366" இலிருந்து மீள்விக்கப்பட்டது