பக்கம்:நாவுக்கரசர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

இடையறாப் பேரன்பு மழைவாரும்

இருவிழியும் உழவர் ரத்தின் படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் நடையறாப் பெருந்துறவும் வாகீசப்

பெருக்தகைதன் ஞானப் பாடல் தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்

பொலிவழகும் துதித்து வாழ்வாம்.’

- சிவஞானமுனிவர்.

‘திருவருட் செல்வர்கள் - என்ற வரிசையில் இரண் டாவதாக வர வேண்டிய நூல் இரண்டாவதாகவே வெளி வருகின்றது. தம்பிரான் தோழர்’ என்ற நூலை எழுதி முடித்த உற்சாகத்தில் அப்பர் மெருமானின் அருளிச் செயல்களில் ஆழங்கால்பட்டு அநுபவித்தேன். இவர்தம் தமிழ்பாடல்கள் திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை, திருத்தாண்டகம் என்ற நான்கு வகை யாப்பு களில் அமைந்துள்ளன. அதிகாலையில் (4 மணிக்கு) எழுந்து உலகம் முழுவதும் உறங்கிய நிலையில் இருக்கும் போது இவர்தம் திருப்பாடல்களை வாய்விட்டு படித்தால் நம் ஒலியே நம் காதின் மூலம் சென்று நம் மனத்தை உருக்கும்; கண்ணிர் ஆறாகப் பெருகும். இதை அநுபவத்தில் கண்டு மகிழ்கிறேன். உடனே இப்பெருமான் பற்றியும் நூல் எழுதத் துணிந்தேன்.

1, காஞ்சிப் புராணம் - காப்புப் பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/36&oldid=634380" இலிருந்து மீள்விக்கப்பட்டது