பக்கம்:நாவுக்கரசர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிறப்பும் வளர்ப்பும்

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. இவற்றுள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளை அருளியவர் திருநாவுக்கரசர். இவர் சிவன் என்னும் திருநாமத்தைச் சிறப்பினும் செம்பொருளாகக் கொண்டு ஒழுகிய தெளிந்த சிந்தையுடையவர். இவரை நம்பியாரூரர்,

திருகின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்! என்று பாராட்டிப் போற்றுவர். இதுவே, சிவனென்னும் ஓசை யல்ல தறையோ

உலகில் திருகின்ற செம்மை உளதே? என்ற இவரது வாய்மொழியாலும் உணரப்படும்.

வடக்கே திருவண்ணாமலையும், கிழக்கே கடலும், தெற்கே நிவா, கொள்ளிட ஆறுகளும், மேற்கே மலைகளு மாகப் பரந்திருந்த நாடுதான் திருமுனைப்பாடி நாடு. இது சோழ நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் நடுவில் அமைந்ததால் நடுநாடு என்றும் வழங்கப் பெறுகின்றது. இந்த நாட்டை முனையரையர் என்ற வீரம் செறிந்த சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தமையால் முனைப்பாடி என்றும்

1. சுந்த. தேவாரம். 7.39:4 (திருத்தொண்டத்தொகை) 2. அப்பர். 4.8:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/44&oldid=634394" இலிருந்து மீள்விக்கப்பட்டது