பக்கம்:நாவுக்கரசர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நாவுக்கரசர்

தன்றோ? மருள்நீக்கியாரைப் பெற்ற தாயும் தந்தையும் இளம் பருவத்தில் இறந்து போயினர் எனவும், இந் நிலையில் உயிர் துறக்க எண்ணிய திலகவதியார் தம்பியைப் பாதுகாத்தற் பொருட்டு உயிர் தாங்கியிருந்தார் எனவும் மேற்காட்டிய தம்பியார் உளராக வேண்டும் என்ற பாடலில் சேக்கிழார் பெருமான் உணர்த்தும் செய்தியை இக் குறுந்தொகைப் பாடல் அகச் சான்றாக உறுதிப்படுத்து வதைக் கண்டு மகிழலாம். -

முற்பிறப்பின் வரலாறு : இவரது முற்பிறப்பைப்பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவை பின் வந்தவர்களால் புனையப் பெற்றவை என்பது தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்களின் கருத்து. முன்னமே முனியாகி எமையடையத் தவம் முயன்றான்’ .11 என்ற தொடரும் பண்டு புரி நற்றவத்துப் பழுதினளவிறை வழுவும் தொண்டர் 12 என்ற சேக்கிழார் வாக்கும் புனைகதைகட்கு வித்துகளாக அமைகின்றன.

- வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் முற்பிறப்பின் திருப்பெயர். இப் பெயர் கொண்ட முனிவர் ஒருவர் கயிலை மலைச்சாரலில் தவம் செய்கின்றார். ஆணவமே வடிவெடுத்த இராவணன் ஒரு நாள் வடதிசை நோக்கித் தன் தேரை வான் வழியாகச் செல்லுமாறு கட்டளை யிடுகின்றான். கயிலை மலையை நெருங்கியவுடன் தேர் செல்லாததை உணர்கின்றான் வலவன். இனி நம் தேர் ஏகாது இறைவா என்கின்றான். இராவணன் கார ணத்தை வினவ, விண்வழி கயிலை மலையால் அடை பட்டுக் கிடக்கின்றது’ என்று மறுமொழி கூறுகின்றான் வலவன். சினம் மிக்க இராவணன், இக் கயிலை மலையை என் புயவலியால் பெயர்த்தெறிவேன்’ என்கின்றான்.

T[ பு. திருநாவுக், 43, 12. டிெ டிெ-49.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/51&oldid=634402" இலிருந்து மீள்விக்கப்பட்டது